வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரு வாரத்திற்கு பிக்பாஸில் இவ்வளவு சம்பளமா.? பிரியங்காவை மிஞ்சிய அபிநய்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 தொடங்கி வெற்றிகரமாக 3 வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியாளர்களும் இந்த ஒரு வாரமாக எவ்வளவு கண்டன்ட் கொடுக்க முடியுமோ கொடுத்து தரமாக விளையாடி வருகின்றனர். போட்டியாளர்களும் குழுக்களாக பிரிந்து பிரிந்து எதிர் குழுவினரை தாறுமாறாக வசைபாடி வருகின்றனர்.

போட்டியாளர் நமீதா மாரிமுத்து உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் முதல் வாரத்திலேயே போட்டியை விட்டு விலகிவிட்டார். அதைத் தொடர்ந்து நாடியா சாங், அபிஷேக் மக்களின் மத்தியில் செல்வாக்குப் பெறாமல் குறைந்த ஓட்டுகளோடு போட்டியை விட்டு எலிமினேட் ஆகி வெளியே சென்றுவிட்டார்.

தற்பொழுது பிக்பாஸ் போட்டியாளர்கள் பெறும் சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியாளர்களின் ஒருவார சம்பளம் விபரம் இதோ!

bb5-contestants-cinemapettai1
bb5-contestants-cinemapettai1

அபிஷேக் ராஜா – 1.75 லட்சம், இசைவாணி – 1 லட்சம், ராஜூ ஜெயமோகன் – 1.5 லட்சம், மதுமிதா -2.5 லட்சம், பிரியங்கா தேஷ்பாண்டே -2 லட்சம், நமீதா மாரிமுத்து – 1.75 லட்சம், அபிநய் – 2.75 லட்சம், பாவணி ரெட்டி – 1.25 லட்சம்

வருண் – 1.25 லட்சம், இமான் அண்ணாச்சி- 1.75 லட்சம், சின்னப்பொண்ணு – 1.5 லட்சம், அக்ஷரா ரெட்டி – 1 லட்சம், நாடியா சாங் – 2 லட்சம், சுருதி – 70, 000, சிபி – 70,000, ஐக்கி பெர்ரி – 70,000, நிரூப் – 70,000, தாமரைச்செல்வி – 70,000.

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதால்தான் இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள பிரபலங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

Trending News