தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்த விஜயகாந்தின் ஒரு சாதனையை இனிமேல் யாரும் முறியடிப்பது கடினமே. கோலிவுட்டின் கேப்டன் விஜயகாந்த் நடிப்பிற்கு இன்று வரை ரசிகர்கள் இருந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
சினிமாவில் 70ல் அறிமுகமான விஜயகாந்த் தன் பெயரில் சிறு மாற்றம் செய்து பல ரசிகர்களை தன்னுள் ஈர்த்து கொண்டுள்ளார். விஜயகாந்தின் முதல் படம் பெரிதாக அவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. தொடர்ந்து வெளியான சில படங்களும் அவருக்கு திரை வாழ்வில் பெரும் தடையாக அமைந்தது. ஒரு கட்டத்தில் பல தோல்விகளும் சில வெற்றிகளும் என அவர் கிராப் மாறி மாறி சென்று கொண்டு இருந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு 100வது படம் தோல்வியாகவே அமையும் ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் அவருக்கு மாஸ் ஹிட் கொடுத்து வசூல் சாதனையை பெற்றது. தமிழ் சினிமாவில் இப்படி சாதனை மன்னனாகவே திகழ்ந்த விஜயகாந்த் அரசியல் உலகிலும் தன் திறமையால் சாதனை புரிந்து வந்தார்.
விஜயகாந்தின் ஒரு சாதனை இன்று பல நாயகர்களால் முறியடிக்கப்படாமல் இருந்து வருகிறது. ஒரே வருடத்தில் 18 படங்களை நடித்தார். 1984ம் ஆண்டு சராசரியாக 20 நாளைக்கு ஒரு படம் நடித்து இருந்தார்.
அந்த படங்கள், ஜனவரி 1, வைதேகி காத்திருந்தாள், இது எங்க பூமி, சத்தியம் நீயே, நாளை உனது நாள், சபாஷ், வீட்டுக்கு ஒரு கண்ணகி, மாமன் மச்சான், நல்ல நாள், வெள்ளைப்புறா ஒன்று, குழந்தை யேசு, நூறாவது நாள், வேங்கையின் மைந்தன், வெற்றி, தீர்ப்பு என் கையில், மெட்ராஸ் வாத்தியார், மதுரை சூரன் ஆகிய படங்கள் தான்.
இதில், பல பாடங்கள் வெற்றி அடைந்தாலும் நூறாவது நாள், வைதேதி காத்திருந்தாள் படங்கள் வெள்ளி விழா கண்டது குறிப்பிடத்தக்கது.