நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், தற்போது இந்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால், இதில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன.
இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரவு மற்றும் பகல் நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல மாநிலங்களில் எண்ணிக்கையை குறைத்து வருகின்றது.
ஆனாலும் கூட இந்த வைரசின் வீரியம் அதிகமாக இருப்பதால் மக்கள் பீதியில் தான் உள்ளனர். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.
தற்போது 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதற்க்காக மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனை முன் பதிவு செய்வதற்காக இணையதளம் www.cowin.gov.in ஒன்றை அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில் முன்பதிவு செய்து கொண்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.