இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி அப்ப்டிச் செய்தால் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெல்ல வாய்ப்புள்ளது என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து, இலங்கை அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்துவிட்டு வந்த அதே வேகத்தோடு இந்திய அணியுடன் மோதியது. இதில், 3 டெஸ்ட்டிலும் இந்தியா தோற்றது. இது பிசிசிஐ மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரசிகர்களுக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா, புதிய பயிற்சியாளர் காம்பீர் ஆகியோரை அழைத்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பை-க்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
ஏற்கனவே நியூசிலாந்து உடனான தொடரை இழந்ததால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தினால்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இது சவாலானது. அதேசமயம், ஆஸ்., இதை உணர்ந்து விளையாடும் என தெரிகிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி பெர்த்தில் நடக்கிறது. இது அதிவேக பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளமாகும். இதனால் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் கிளார்க் கூறியதாவது
இந்நிலையில் கோலி ரன் வேட்டை நடத்தினால்தான் இந்தியா தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக ஆஸ்., முன்னாள் கேப்டன் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ”ஆஸ்., மண்ணில் கோலியின் பேட்டிங் சாதனை அபாரமானது. அவர் இந்தியாவை விட அஸ்., மண்ணில்தான் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆஸ்., க்கு எதிராக 13 டெஸ்டுகளில் விளையாடி அதில் 6 சதங்கள் அடித்திருக்கிறார். இத்தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டுமென்றால் கோலி ரன் குவிக்க வேண்டும். அவரோடு சேர்ந்து ரிஷப் பண்டும் ரன் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்.,க்கு எதிரான தொடரில் விராட் கோலி ரன் வேட்டை நடத்தி பல புதிய சாதனைகள் படைப்பார் என ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். இத்தொடரில் இந்தியா ஜெயிக்கும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் சென்றால் நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.