தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அந்த இளம் கதாநாயகன் மிகவும் குறுகிய காலத்திலேயே உச்சம் தொட்டவர். பல அவமானங்கள் மற்றும் நிராகரிப்புகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முன்னேறிய அந்த நடிகர் அவரது நடிப்பு திறமையால் ரசிகர்கள் பலரை குறிப்பாக இளைஞர்களை தன்வசம் ஈர்த்தார்.
மேலும் ஆரம்ப காலகட்டத்தில் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து பார்த்து பார்த்து நடித்து வந்த அந்த நடிகர் தற்போது காதில் கேட்கும் அனைத்து கதைகளுக்கும் ஒகே சொல்லி விடுகிறார். என்ன கதை என்ன கதாபாத்திரம் என்பதெல்லாம் அவருக்கு தேவை இல்லை என்பது போல் அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார்.
ஏற்கனவே ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் அந்த நடிகர் இன்னும் பல படங்களுக்கு கதை கேட்டு ஒப்பந்தமாகி வருகிறாராம். இவர் நடித்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ள நிலையில், அடுத்தடுத்து படங்களில் அந்த நடிகர் கமிட்டாகி வருவது கோலிவுட்டில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
என்னதான் நடிகர் ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தாலும் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தோல்வியையே தழுவி வருகின்றன. இருப்பினும் இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத நடிகர் படம் வெற்றி பெற்றாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி நான் நடிப்பதை நிறுத்த மாட்டேன் என அடம்பிடித்து தன்னை தேடி வந்து கதை சொல்லும் அனைத்து இயக்குனர்களுக்கும் ஒகே சொல்லி வருகிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அந்த நடிகருக்கு என்னதான் ஆச்சு என யோசித்து வந்த நிலையில் தற்போது நடிகருக்கு நெருங்கியவர்கள் சிலர், நடிகருக்கு பணம் தான் முக்கியம் என கூறியுள்ளனர். எனவே தான் அனைத்து படங்களுக்கும் அட்வான்ஸ் வாங்கி விட்டு படத்தை நடித்து முடித்துவிடுவாராம்.
அதன்பிறகு படம் ரிலீஸ் ஆவதும் ஆகாததும் தயாரிப்பாளர் பொறுப்பு என்று விட்டு விடுகிறாராம். பணத்தை பார்க்கும் நடிகர் ஏனோ கதையை பார்க்க மறந்து விடுகிறார். இப்படியே சென்றால் அவர் கெரியரே காலியாகிவிடும் என ரசிகர்கள் எச்சரித்து வருகிறார்கள்.