திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிச்சவங்க மட்டும் தான் ரஜினியோட கூட்டணி போட முடியும்.. சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா?

ஒரு காலத்தில் கமல் ஹீரோவாக பட்டையை கிளப்பி வந்த காலத்தில் ரஜினி வில்லனாக நடித்து வந்தார். ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே கமலை பின்னுக்கு தள்ளிவிட்டு சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை ரஜினி பிடித்து விட்டார். இதற்குக் காரணம் அவருடைய ஸ்டைல், நடிப்பு என பல சொன்னாலும் இதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது.

இது தெரிந்தால் சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா என பலரும் ஆச்சரியப்படுவார்கள். அதாவது ரஜினி தனக்கு மாபெரும் ஹிட் படத்தை இயக்குனர் கொடுத்தாலும் ஒரே ஒரு தோல்வி படத்தை கொடுத்து விட்டால் அவருடன் மீண்டும் இணைய மாட்டார். இது இவரது திரை வாழ்க்கையை எடுத்துப் பார்த்தாலே தெரியும்.

Also Read : ரஜினி படத்தால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்.. எதிர்பாராத பரிசு கொடுத்து வாழ வைத்த சூப்பர் ஸ்டார்

அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் ரஜினிக்கு படையப்பா, முத்து என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் லிங்கா என்ற படுமோசமான தோல்வி படத்தை கொடுத்ததால் அதன் பிறகு கே எஸ் ரவிக்குமார் படத்தில் நடிக்க ரஜினி மறுப்பு தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி அப்போது யார் ட்ரெண்டிங்கில் இருக்கிறாரோ அவர் படத்தில் நடிக்க தான் ரஜினி விரும்புவார்.

பி வாசு போன்ற இயக்குனருடன் பணியாற்றி வரும்போது ஷங்கர் என்ற இயக்குனர் வளர்ந்து வருகிறார் என்று தெரியவந்த உடன் அவருடைய படங்களில் ரஜினி நடிப்பார். அதேபோல் இளையராஜா உடன் பயணித்து வந்த ரஜினி ஏ ஆர் ரகுமான் ட்ரெண்டான உடன் அவரை தனது படங்களில் இசையமைக்க வைத்தார்.

Also Read : அங்க இருந்து வந்துட்டு இங்க நீ சூப்பர் ஸ்டாரா? எதார்த்தமாக பேசிய ரஜினியிடம் வன்மத்தை காட்டும் நடிகர்

இப்போது அனிருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் சமீபகாலமாக ரஜினியின் படங்களில் அனிருத் இசையமைத்து வருகிறார். அதேபோல் தான் கார்த்திக் சுப்புராஜ், ஏ ஆர் முருகதாஸ் இப்போது நெல்சன் என பலரும் அந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்படுபவர்களை தனது படங்களில் ரஜினி இழுத்து போட்டுக் கொள்வார்.

அதனால் தான் ரஜினி தனது கேரியரில் மிக குறுகிய காலத்திலேயே அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ளார். இதை ஒரு யுத்தியாகவே ரஜினி பயன்படுத்தி வருவதாக வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுவும் ஒரு வகையில் உண்மைதான் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : ரஜினியை பின்பற்றும் அஜித், விஜய்.. எந்த தைரியத்துல இப்படி எல்லாம் செய்றாங்க

Trending News