வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

11 முறை நாமினேட் செய்தும் வெளியேறாத இரண்டே நபர்கள்.. பிக்பாஸ் அல்மேட்டில் அதே சப்போர்ட் கிடைக்குமா?

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த ஐந்து சீசன் களையும் வெற்றிகரமாக நிறைவு செய்த தற்போது புது முயற்சியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய உள்ளது.

எனவே இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 30ஆம் தேதியன்று துவங்கவுள்ளது. ஆகையால் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை குறித்து சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் இரண்டே நபர் மட்டும் 11 முறை நாமினேட் செய்யப்பட்டு மக்கள் ஓட்டின் அடிப்படையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அதாவது கடந்த பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் மற்றும் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டாப் 3 பைனல் லிஸ்ட் ஆன பவானி ரெட்டி இருவரும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 11 முறை நாமினேட் செய்து அதன்பின் மக்கள் அளித்த ஓட்டின் அடிப்படையில் 11 முறையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பாவனி மற்றும் ஆரி இருவருக்கும் மக்கள் மற்ற போட்டியாளர்களை விட அதிக சப்போர்ட் அளித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதைப்போல் பிக் பாஸ் சீசன்4ல் கலந்து கொண்ட செய்தி வாசிப்பாளரான அனிதா, 9 முறை பிக்பாஸ் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

அனிதா தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். அதைப்போல் பிக் பாஸ் சீசன்3ல் கலந்துகொண்ட கவின், இதுவரை 8 முறை நாமினேட் செய்யப்பட்டு சேவ் ஆகியுள்ளார். மேலும் கவின் கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வாறு கடந்த ஐந்து சீசன்கள் ஆரி அர்ஜுனன், பவானி ரெட்டி , அனிதா, கவின் இவர்கள் நான்கு பேர் அதிகமுறை நாமினேட் செய்யப்பட்டு சேவ் ஆன பிக்பாஸ் போட்டியாளர்கள் என்பதை தற்போது அவர்களுடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Trending News