மாணவர்களை சீர்கெடுக்கிறாரா மாரி செல்வராஜ்? Bison பட காட்சியை சுற்றிய சர்ச்சை
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேரும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் சமூகநீதியையும் சாதி சமத்துவத்தையும் பேசும் வகையில் உருவானவை. ஆரம்பத்தில் அவருக்கு கிடைத்த பாராட்டு இன்று சர்ச்சையாக மாறியுள்ளது. காரணம்- அவரது புதிய படம் Bison. இந்த படம் வெளியாவதற்குள் பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, வாழை படத்தில் ஒரு school teacher dance ஆடும் காட்சிகள் எடுத்தது மாணவர்களின் நற்பண்பை பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்தனர். பல பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது கல்வியாளர்களின் மரியாதையை குறைக்கும் காட்சி. ஆசிரியர் என்பது ஒரு மரியாதைக்குரிய நிலை. அவர்களை இவ்வாறு கமெர்ஷியல் சினிமாவில் தாழ்த்தி காட்டுவது தவறானது என்று பலர் குறிப்பிட்டனர்.
மாணவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் “மாரி செல்வராஜ் படங்கள் சமுதாய உண்மையை காட்டுவதாக சொல்லி வந்தாலும், இப்போது அவர் காட்டுவது ஒழுங்கை சீர்கெடுக்கக் கூடிய காட்சிகள்” எனக் கூறியுள்ளனர்.
மாரி செல்வராஜ் ஒரு திறமையான இயக்குனர் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால், அந்த திறமையை எந்த திசையில் பயன்படுத்துகிறார் என்பதே முக்கியம். “பரியேரும் பெருமாள்” மற்றும் “கர்ணன்” படங்களில் அவர் சமுதாய பிரச்சினைகளை வலுவாக முன்வைத்தார். ஆனால் “Bison” டீசர் மற்றும் சில காட்சிகள் பார்த்த ரசிகர்கள், “இது மாரி செல்வராஜ் அவர் பாதையை விட்டு விலகியுள்ளார் ” என்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் #BoycottBison என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது. மாரி செல்வராஜ் பக்கம் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை. இருப்பினும், தற்போதைய நிலைமையில் #Bison படம் வெளிவருவதற்கு முன்பே எதிர்மறையான எண்ணம் உருவாகிவிட்டது.
பைசன் பட காட்சிகள்
இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் எந்தக் காட்சியையும் உடனடியாக பார்க்கிறார்கள். OTT, YouTube, Instagram போன்ற தளங்களில் சில வினாடிகளில் அந்த காட்சிகள் வைரலாகும். அதனால் ஒரு இயக்குநர் காட்டும் ஒவ்வொரு விஷயமும், ஒரு தலைமுறையின் சிந்தனையை வடிவமைக்கக் கூடும். அதனால்தான், சமூக வலைதளங்களில் பலரும் “மாரி செல்வராஜ் படங்கள் நிச்சயமாக முக்கியம், ஆனால் பொறுப்பும் அதே அளவு இருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளனர்.
ஒரு சில ரசிகர்கள் “மாரி செல்வராஜ் உண்மையான கலைஞர் என்றால், தனது சினிமாவை மாணவர்களின் நெறி வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்” என கூறியுள்ளனர். சினிமா சமூகத்தை பிரதிபலிக்கலாம், ஆனால் அதை கெடுக்கக்கூடாது என்பதே அவர்களின் கருத்து.
இந்த முறை சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை புகைப்படத்தை குறியீடாக வைத்து பைசன் #Bison வைத்துள்ளார். இதற்கும் வன்மையான கண்டனங்கள் வருகிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவுபடுத்தி விட்டார் அதனால் அவர் படத்தை புறக்கணிக்க வேண்டுமாம்.
இந்தச் சர்ச்சை முடிவுக்கு வருமா, அல்லது இது மாரி செல்வராஜின் படங்களின் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது காலமே தீர்மானிக்கும். ஆனால் தற்போது நிலவும் சூழல் ஒரே விஷயத்தைத் தெளிவாகச் சொல்லுகிறது. “மாணவர்களின் மனநிலையைக் காக்கும் பொறுப்பு சினிமாவுக்கும் இருக்கிறது!”
