1. Home
  2. கருத்து

பிரியங்காவை டம்மியாக்க விஜய் டிவிக்கு வந்த DD.. CWC டைட்டில் வென்ற போட்டியாளர்

பிரியங்காவை டம்மியாக்க விஜய் டிவிக்கு வந்த DD.. CWC டைட்டில் வென்ற போட்டியாளர்

விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாம் சீசனில், சண்டை, கூட்டணி, உணர்ச்சி மழைகள் நடந்தன. இந்த சீசனில் கூட்டுணர்ச்சி, மனதுக்கு மோதல், நம்பிக்கை என அனைத்துமே ஒருங்கிணைந்திருந்தது. அந்த சீசனில் ராஜு மோகன் மிக சக்திவாய்ந்த போட்டியாளராக திகழ்ந்தார். இறுதியில், அனைத்து வாக்குகளை பெற்றுவிட்டு, பிக் பாஸ் 5 டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் டிவியில் ஒருவராகவே இருந்து BB ஜோடிகள் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ராஜு வீட்ல பார்ட்டி போன்ற நிகழ்ச்சியையும் நடத்தி வந்தார். இதற்கு இடையில் பன் பட்டர் ஜாம் என்ற ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தபடியாக குக் வித் கோமாளி சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் சமைக்கும் போட்டியாளராக பங்கு பெற்றார். இவருடைய காமெடியும் தனிப்பட்ட சிரிப்பு மக்களை கவர்ந்தது. அத்துடன் ஜட்ஜ்களை கவரும் வகையில் சமையல் திறமையை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் அசத்தினார். அந்த வகையில் இந்த வாரத்துடன் குக் வித் கோமாளி சீசன் 6 இறுதி அத்தியாயத்துடன் முடியப்போகிறது.

குக் வித் கோமாளி 6

‘குக் வித் கோமாளி’ என்பது சமையலையும் நகைச்சுவையையும் கலந்த நிகழ்ச்சி. ரசிகர்களின் அன்பையும் விமர்சனங்களையும் அடித்தடையாய் பெற்றது. இந்த சீசனில் ராஜு, ஷபானா, உமர், லட்சுமி ராமகிருஷ்ணன் இறுதி போட்டியாளராக வெற்றி பெற்றார்கள். ஆனால் டைட்டிலையும் வரிசையும் பரிசையும் கைப்பற்றிய ஒரே ஒரு போட்டியாளர் ராஜு மோகன் தான்.

ராஜு மோகனின் வெற்றி

இவர் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை கவர்ந்ததால் டைட்டிலுடன் 50 லட்ச ரூபாய் பணத்தையும் பெற்று முதல் போட்டியாளராக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வெற்றி பெற்று இருப்பதால் இதுவே ரியாலிட்டி ஷோவில் இரண்டு டைட்டிலை வெற்றி பெற்ற ஒரு நபர் என்ற சாதனை இவருக்கு கிடைத்திருக்கிறது.

மீண்டும் DD

விஜய் டிவியின் நிகழ்ச்சியின் சாம்ராஜ்யத்தை கட்டி காத்த பெருமை DD சேரும். அந்த அளவிற்கு எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பல பிரபலங்களையும் பேட்டி எடுத்து ஒரு முன்னணி தொகுப்பாளனையாக புகழ்பெற்றிருக்கிறார். அப்படி பெற்றவர் உடல்நிலை காரணமாக விஜய் டிவி சேனலில் இருந்து விலகி இருந்தார். அவ்வப்போது பிரபலங்கள் நடத்தும் விழாக்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்த இவர் மீண்டும் விஜய் டிவிக்குள் வந்திருக்கிறார்.

பிரியங்காவை டம்மியாக்க விஜய் டிவிக்கு வந்த DD.. CWC டைட்டில் வென்ற போட்டியாளர்
DD photo
சிறப்பு விருந்தினராக DD - குக் வித் கோமாளி 6

குக் வித் கோமாளி 6 இறுதி அத்தியாயத்தில் பங்கு பெறும் 4 போட்டியாளர்களுக்கு உறுதுணையாக இருக்க சிறப்பு விருந்தினராக டிடி விஜய் டிக்குள் மறுபடியும் வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் நடக்க போகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒரு தொகுப்பாளனையாக அவருடைய பயணத்தை தொடங்குவார் என்று மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

பிரியங்கா

பிரியங்கா வந்ததிலிருந்து மற்ற தொகுப்பாளினிகள் கொஞ்சம் கொஞ்சமாக விஜய் டிவி சேனலில் இருந்து விலகியதாக சர்ச்சைகள் வெளியானது. தற்போது பிரியங்கா கல்யாண வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால் இனி தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாததால் டிடியை விஜய் டிவி சேனல் தரப்பில் இருந்து கூப்பிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் டிடி வந்திருப்பதால் இனி பிரியங்காவின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கம்மியாகும் என்று பேசப்படுகிறது.

Cinemapettai Team
Thenmozhi

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.