1. Home
  2. கருத்து

வசூல் மழை.. எதிர்பாராத தோல்வி: ஜனவரி மாத தமிழ் சினிமா ஒரு அலசல்!

parasakthi

பராசக்தி - பொங்கல் average வின்னர்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியானது. 1960-களின் பின்னணியில் உருவான இந்தப் படம் மொழிக்காகப் போராடிய மாணவர்களின் போராட்டத்தைச் சித்தரித்தது. உலகம் முழுவதும் இப்படம் சுமார் 84.71 கோடி வசூலித்துள்ளது. ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானாலும், இரண்டாவது வாரத்திற்குப் பிறகு வசூல் சற்று குறைந்தது. இருப்பினும், ஜனவரி மாதத்தின் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக இது உருவெடுத்துள்ளது. ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தது.

தலைவர் தம்பி தலைமையில் - ஸ்லீப்பர் ஹிட்

இந்த மாதத்தின் உண்மையான 'சர்ப்ரைஸ் ஹிட்' என்றால் அது ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்' தான். நிதீஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஒரு அரசியல் நையாண்டி  திரைப்படமாகும். வெறும் 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், இதுவரை 36.15 கோடிக்கு மேல் வசூல் செய்து 'சூப்பர் ஹிட்' அந்தஸ்தைப் பெற்றுள்ளது. பெரிய விளம்பரங்கள் இன்றி வெளியானாலும், மக்களின் வாய்மொழித் தகவல் மூலம் தியேட்டர்களில் கூட்டம் கூடியது. ஜீவாவுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு கிடைத்த ஒரு தரமான வெற்றி இது.

வா வாத்தியார்:

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய 'வா வாத்தியார்' திரைப்படம் பல தாமதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளியானது.இப்படம் சுமார் 8.28 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் பின்னடைவைச் சந்தித்தது. தியேட்டர்களில் வரவேற்பு குறைந்ததைத் தொடர்ந்து, ஜனவரி 28-ம் தேதியே அமேசான் பிரைம் ஓடிடியில் இப்படம் வெளியாகிவிட்டது.

தி ராஜா சாப் (The Raja Saab):

பிரபாஸ் நடிப்பில் வெளியான இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது.

2026 ஜனவரி மாதத்தைப் பொறுத்தவரை, கருத்து ரீதியாக 'பராசக்தி' பேசப்பட்டாலும், லாப நோக்கில் 'தலைவர் தம்பி தலைமையில்' படமே முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.