தொகுப்பாளினி என்றாலே நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பிரபலங்களையும் மக்களையும் இணைக்கும் ஒரு விஷயமாகவும், முக்கியமான விஷயங்களை கேள்வி கேட்டு விறுவிறுப்பாக அந்த நிகழ்ச்சியை கொண்டு போவது தான் பொறுப்பு. ஆனால் சமீபத்தில் நடந்த ரவி மோகன் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவில் தொகுப்பாளனி கேட்ட கேள்வியால் கடுப்பான யோகி பாபு கொடுத்த பதிலடியால் சர்ச்சையாக இருக்கிறது.
அதாவது ரவி மோகன் தயாரிப்பு நிறுவன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளனியாக vj பாவனா வந்திருந்தார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதில் பிரபலமானவர். அப்படிப்பட்டவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொழுது யோகி பாபு அருகே சென்று உங்களை பார்க்கவே இல்லை என எடக்கு மடக்கான கேள்வியை கேட்டிருக்கிறார்.
அதற்கு யோகி பாபு அவருடைய ஸ்டைலில் பதில் கொடுத்து இருக்கிறார். அதாவது யோகி பாபுவிடம் சென்று மைக்கை கொடுத்து கொஞ்சம் எங்களுக்காக எழுந்து நில்லுங்க, உங்க மைண்ட் வாய்ஸ்ல இப்ப என்ன ஓடிக்கிட்டு இருக்கு என்று சொல்லிட்டு அதன் பிறகு உங்க பிரதருக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க என்று கொஞ்சம் திமிராக கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு யோகி பாபு, ரவி சார் என்ன வச்சு படம் எடுக்காரு அவர் நல்ல மனசுக்கு அந்த நிறுவனமும் நல்லபடியாக வளரும் என்று வாழ்த்துக்களை சொன்னார். உடனே பாவனா இப்படி நல்லவராகவே நடிச்சுட்டு இருந்தா எப்படி என்று கேட்டிருக்கிறார். நான் நல்லா தான் யோசிச்சேன், உன்ன மாதிரி என் பின்னாடி இருந்துட்டு அவருக்கு சேர் போடாதீங்க என்று நான் யோசிக்கல என்று சிரிச்ச மாதிரி யோகி பதில் சொல்லி இருக்கிறார்.

அதற்கும் பாவனா, தொடர்ந்து நீங்க ரொம்ப நல்லவர்தான் என்று நக்கல் அடிக்கும் விதமாக சொல்லிய நிலையில் யோகி பாபு அதை சிரிச்ச மாதிரி சொல்லு, மூஞ்சிய ஏன் இப்படி வச்சிருக்கே என்று கடுப்பாகி பாவனாக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். ரவி மோகன் நிகழ்ச்சியில் இவர்களுடைய வாக்குவாதம் சர்ச்சை ஆகிய நிலையில் இணையத்தில் இது பேசும் பொருளாக பரவி வருகிறது.
ஏற்கனவே இப்படித்தான் யோகி பாபு மற்றும் பிரியங்காவுக்கும் இடையே மேடையில் வாக்குவாதம் ஏற்படும் அளவிற்கு நீ இப்படி பேசினால் சைட் டிஷ் மட்டும் இல்ல சரக்கு அடித்துக்கொண்டு இருக்கலாம் என்று யோகி பாபு சொன்ன விஷயம் வைரலானது. அதே மாதிரி இப்பொழுது தொகுப்பாளனி பாவனாவும் தேவையில்லாமல் கேட்ட கேள்வியால் கடுப்பாகி இருக்கிறார்.