1. Home
  2. கருத்து

Bison-யை மிஞ்சிய கண்ணகி நகர் கார்த்திகா.. இந்தியாவை பெருமைப்படுத்திய சம்பவம்!

Bison-யை மிஞ்சிய கண்ணகி நகர் கார்த்திகா.. இந்தியாவை பெருமைப்படுத்திய சம்பவம்!

சென்னையின் புறநகரான கண்ணகி நகர் – ஒரு பெயர் சொல்லப் போனால், பலருக்கு மனதில் உருவாகும் படிமம் பிழையாகவே இருக்கும். 2000ஆம் ஆண்டு, நகரின் பூர்வக்குடி மக்களை குடியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த பகுதி, இன்று ஏறத்தாழ 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பெரிய குடியிருப்பு.

இவர்களில் பெரும்பாலானோர் தூய்மை பணியாளர்கள், தினக்கூலிகள், அவர்களால்தான் இன்று சென்னை இயங்குகிறது. ஆனால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள், சுத்தமான குடிநீர், சுகாதாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதிலும் மேலாக, சமூக பார்வையில் “கண்ணகி நகர்” என்ற பெயரே ஒரு தூண்டுதல் வார்த்தை - அது தான் மாற்ற நினைத்த ஒரு இளம் பெண் கார்த்திகா!

“UNIVERSAL KANNAGI NAGAR WOMEN’S KABADDI CLUB” - ஒரு புரட்சியின் தொடக்கம்!

“கண்ணகி போல போராடும் பெண்கள்” - அதுதான் இந்த அணியின் அடையாளம்! Universal Kannagi Nagar Women’s Kabaddi Club உருவானது, ஒரு விளையாட்டு அணி மாதிரி இல்ல; அது ஒரு சமூக புரட்சியாக இருந்தது. பெண்கள் கபாடி அணியை உருவாக்குவது எளிதல்ல. அதிலும் கண்ணகி நகர் மாதிரி பின்தங்கிய பகுதியிலா? இன்னும் சிரமம். பள்ளிகளில் அனுமதி, மைதானம் கிடைப்பது, பெற்றோரின் ஆதரவு - ஒவ்வொரு படியும் ஒரு போராட்டம் தான்.

ஆனால் அந்தப் போராட்டத்தை ஒரு கருவியாக எடுத்துக் கொண்டு, இந்த அணி “நாங்க யாரும் குறைவில்லையென்று” உலகத்துக்கு நிரூபித்தது. இன்று SGFI, யூனிவர்சிட்டி, ஜூனியர், சீனியர் - எந்த தமிழ்நாடு அணியிலிருந்தும் கண்ணகி நகர் வீராங்கனை இல்லாதது இல்லை!

“தங்க மகள்” கார்த்திகா - ஸ்வீப்பரின் மகளிலிருந்து இந்தியாவின் ஹீரோவாக!

அந்த அணியிலிருந்தே இன்று இந்தியாவை பெருமைப்படுத்தியவர் 17 வயது கார்த்திகா! ஒரு தூய்மை பணியாளர் குடும்பத்தில் பிறந்த இவர், தனது “Raiding Skills” மூலம் உலகையே கவர்ந்திருக்கிறார். பஹ்ரைனில் நடைபெற்ற 2025 ஆசிய இளையோர் போட்டியில், கார்த்திகா இந்திய பெண்கள் கபாடி அணியின் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் தலைமையிலேயே இந்திய அணி தங்கம் வென்று வரலாறு படைத்தது! பலம் வாய்ந்த ஹரியானா, இந்திய ரயில்வேஸ் போன்ற அணிகளுக்கும் கார்த்திகா ஒரு “சிம்ம சொப்பனம்” போல விளையாடியிருக்கிறார். இன்று கபாடி பற்றிப் பேசாதவர்களுக்குக் கூட அவர் பெயர் “தங்க மகள் கார்த்திகா” என ஒலிக்கிறது.

கபாடி ஒரு விளையாட்டு இல்லை - அது ஒரு சமூக எதிர்ப்பு!

கண்ணகி நகர் பெண்கள் கபாடி அணி, ஒரு விளையாட்டு மேடையில் வெற்றி பெறவில்லை மட்டும் இல்ல; அவர்கள் சமூக பார்வையை வென்றுள்ளனர். “கண்ணகி நகர்” என்ற பெயரை மறைத்து சொல்லும் மக்களுக்கே அது இன்று பெருமையாகச் சொல்லும் பெயராக மாறியுள்ளது.

அது ஒரு அணி வெற்றி இல்லை - ஒரு சமூகம் மீட்டெடுத்த மரியாதை. இந்த முயற்சியில் அணியின் பயிற்சியாளர், பெற்றோர், NGO-கள் எனஎல்லோருக்கும் பாராட்டுக்கள். அவர்கள் தான் இந்த மாற்றத்தின் பின்னணி சக்தி.

எதிர்கால இந்தியா காத்திருக்கும் தங்க நம்பிக்கை!

இன்று 17 வயது தான் ஆனாலும், கார்த்திகா ஏற்கனவே இந்தியாவின் புதிய நம்பிக்கையாக மாறிவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் இந்திய சீனியர் அணியில் இடம் பெறுவார் என்பதில் ரசிகர்களுக்கு நம்பிக்கை உண்டு.

அவரின் முயற்சிக்கு Dhyanchand, Arjuna Award போன்ற தேசிய விருதுகள் தாமதமாகலாம், ஆனால் மறுக்க முடியாது. அவர் வெற்றியின் மூலம், கண்ணகி நகர் என்ற பெயர் ஒரு சமூகக் கண்ணோட்டத்திலிருந்து பெருமைக்கான அடையாளமாக மாறிவிட்டது!