1. Home
  2. கருத்து

கோலிவுட் 1000 கோடி கிளப்! வரும் காலத்தில் யார் கையில்?

tamil actors ai image
1000 கோடி கிளப்பை அடைய முடியும் அடுத்த பெரிய நடிகர், படம் யார்? பாக்ஸ் ஆபிஸ் டிரெண்ட்ஸ், பான் இந்தியா மார்க்கெட் சக்தி, ரசிகர் அடிப்படை, மற்றும் இயக்குநர்கள் கூட்டணி அனைத்தையும் அடிப்படையாக வைத்து இந்த விரிவான பகுப்பாய்வு.

தமிழ் சினிமா கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் மேடையில் மிகப்பெரிய போட்டியாளராக மாறிவிட்டது. பான்-இந்தியா மார்க்கெட் உயர்வு, ஓடிடி தாக்கம், மற்றும் தமிழ் படங்களின் தரம் உலக அளவில் பேசப்படும் நிலையில், தற்போது அனைவரும் கேட்கும் முக்கியமான கேள்வி, கோலிவுட் ₹1000 கோடி கிளப்பை அடுத்ததாக யார் தொடுவார்?

சமீப ஆண்டுகளில் “ஜெய்லர்”, “லியோ”, “விக்ரம்”, “PS-1”, “கூலி” போன்ற படங்கள் உலகளவில் வியக்கத்தக்க வசூலை எட்டியுள்ளன. இதில் சில படங்கள் 600-700 கோடி வரை சென்றிருக்கும் போது, 1000 கோடி மார்க்கை அடைவதற்கு தமிழ் சினிமா மிகவும் அருகில் இருப்பதை காட்டுகிறது. இதை அடைய வேண்டிய முக்கிய அம்சங்கள் அதிக பட்ஜெட், பான்-இந்தியா, சரியான ரிலீஸ் ஸ்ட்ராட்டஜி, மற்றும் உலக சந்தைகளில் விரிவாக்கம்.

இந்த வரிசையில் முதல் பெயர் நிச்சயமாக ரஜினிகாந்த். அவர் நடிக்கும் படங்கள் தென்னிந்தியாவிலும், நார்த் மார்க்கெட்டிலும், வெளிநாடுகளிலும் பெரும் fanbase கொண்டவை. “ஜெய்லர்” எடுத்த வளர்ச்சி பாதையைப் பார்த்தால், சரியான நேரத்தில், சரியான இயக்குநருடன் இணைந்தால் ரஜினி படம் 1000 கோடி கிளப்பை மிக எளிதாகத் தொடும் என trade experts நம்புகின்றனர்.

அடுத்த வலுவான போட்டியாளர் தளபதி விஜய். லியோ உலகளவில் சாதனை படைத்த பிறகு, விஜயின் படங்களுக்கு PAN–India கேள்வி அதிகரித்துள்ளது. அவர் நடிக்கும் “ஜனநாயகன்” போன்ற படங்கள் பெரிய ஸ்கேலில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், விஜயின் ரசிகர் அடிப்படை, குடும்ப ஆடியன்ஸ் வருகை, மற்றும் தமிழ், கேரளா, கர்நாடகா மார்க்கெட்டில் அதன் பிடிப்பு 1000 கோடி மார்க்கை அடைய வழிவகுக்கும்.

மற்றொரு முக்கியமான பெயர் சூர்யா. “கங்குவா” ஏற்கனவே பெரும் வர்த்தக எதிர்பார்ப்பை பெற்றது ஆனால் படம் சரி இல்லாததால் வசூல் மிஸ் ஆனது. VFX, உலகளாவிய மார்க்கெட்டிங், மற்றும் 3D ரிலீஸ் all combined இந்த படம் தமிழ் சினிமாவின் மிக அதிக வருமானம் தரக்கூடியதாக கருதினர். Suriya, Siva கூட்டணி PAN India reach-ஐ தொட்டது.

இதேபோல், அஜித் குமார், விக்ரம், கமல் ஹாசன், மற்றும் புதிய தலைமுறை heroகளான சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோரும் சரியான ஸ்கிரிப்ட், பெரிய பட்ஜெட், PAN India director கூட்டணியால் 1000 கோடி கிளப்பின் சாத்தியமான போட்டியாளர்கள். குறிப்பாக, கமல் லோகேஷ் கூட்டணி மீண்டும் நேர்ந்தால், அது 1000 கோடி கிளப்புக்கான வாய்ப்பு அதிகம்.

கோலிவுட் தொழில் தற்போது இந்தியா முழுவதும் மிக வலுவான வளர்ச்சியில் உள்ளது. VFX, உலக சந்தைகளின் வியாபாரம், மற்றும் OTT பங்களிப்பு. அடுத்த பெரிய சாதனை யார் செய்யப் போகிறார் என்பதை ஸ்கிரிப்ட், இயக்குனர்,நடிகர் என்ற மூன்று கோணங்களே தீர்மானிக்கிறது.

அப்படியானால், உங்கள் கணிப்பில் கோலிவுட்டின் முதல் 1000 கோடி படம் யாருடையது இருக்கும்?

Cinemapettai Team
Vijay V

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.