ரஜினி-கமல் கூட்டணியை சுந்தர் சி இயக்கப் போவது இல்ல.. அதிர்ச்சியை கிளப்பிய காரணங்கள்!

சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி-கமல் கூட்டணி இணைவதாக இருந்தது. ஆனால் அறிக்கை மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார் சுந்தர் சி. இதற்கான பல காரணங்களை கோலிவுட் வட்டாரம் தற்போது வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் என்ற இரண்டு பெரும் மாபெரும் நாயகர்கள் ஒரே படத்தில் சேரும் வரலாற்று முயற்சியில், இயக்குனர் சுந்தர் சி திடீரென விலகி இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி அவர் வெளியிட்ட உணர்ச்சி பூர்வமான அதிகாரப்பூர்வ கடிதம் இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை நேரடியாகச் சொல்லாதாலும், பல பேச்சுகள் தற்போது வெளியில் வருகின்றன.
சுந்தர் சி தனது கடிதத்தில் “திடீர் மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நான் #Thalaivar173 இருந்து விலக வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். ரஜினி, கமல் ஆகிய இரண்டு லெஜண்ட்ஸுடன் வேலை செய்வது கனவு என்று கூறிய அவர், மனம் கனங்கி ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனால் இந்த முடிவின் பின்னணி மிகவும் ஆழமானது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது காரணம்: சுந்தர் சி - கமலஹாசன் இடையிலான கருத்து மோதல். திரைக்கதை, படத்தின் treatment, presentation போன்ற விஷயங்களில் இருவருக்கும் சில தவிப்பான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த படி மிகப்பெரிய லெவலில் செய்ய வேண்டிய சூழ்நிலையில், இருவரும் ஒரே பாதையில் செல்ல முடியாத நிலை உருவானது என்று insiders சொல்லுகின்றனர்.
இரண்டாவது - சுந்தர் சி தற்போது கையில் வைத்திருக்கும் பல படங்களின் கட்டாய கமிட்மெண்ட்கள். அவர் தயாரிப்பில் இருக்கும் பல பெரிய திட்டங்களும், கதாநாயகர்களின் தேதிகளும் ஒன்று சேர்ந்து இந்த பிரம்மாண்டமான மிஷனை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு ரஜினி - கமல் படம் என்றால் 100% முழு கவனம் தேவைப்படுவதால், சுந்தர் சி அதை நேர்மையாக உணர்ந்து விலகினார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது - கதையில் மாற்றங்களை Superstar தரப்பில் கேட்டுள்ளதாகவும் தகவல்கள். ரஜினியின் கேரக்டர் ஸ்கோப், சில action sequences, சில dramatic elements ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் சுந்தர் சிக்குள் அழுத்தமாக இருந்ததாக தெரிகிறது. இது இயக்குனரின் கற்பனைக்கு பாதிப்பு ஆகும் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த அனைத்தும் சேர்ந்து, சுந்தர் சி மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும், அதனால் தான் யாருமே செய்யாத அளவுக்கு ஒரு நீண்ட, உணர்ச்சி மிகுந்த அதிகாரப்பூர்வ கடிதத்தை வெளியிட்டு தன் மனக்கவலைகளை வெளிப்படுத்தியதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அவரின் கடிதம் எவ்வளவு வலியுடனும், உண்மையுடனும் எழுதப்பட்டுள்ளதோ அதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரிகிறது.
தற்போது இந்த பிரம்மாண்ட திட்டத்தை யார் இயக்கப்போகிறார்கள்? ரஜினி - கமல் கூட்டணி தொடருமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும்? என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. இது பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்-ரஜினி கூட்டணியை தற்போது இயக்குவதற்கு லோகேஷ் தயாராகி வருகிறாராம். இவர் மட்டுமே இந்த இரண்டு டாப் ஹீரோக்களுடன் வேலை பார்த்ததால் அதிக வாய்ப்பு லோகேஷ் கனகராஜ் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

