1. Home
  2. கருத்து

திமுகவை விட ஆபத்தான ஜோசப் விஜய்.. அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பிய Journalist மணியன்

திமுகவை விட ஆபத்தான ஜோசப் விஜய்.. அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பிய Journalist மணியன்

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதம் கிளப்பியிருப்பது, நடிகர் விஜய். அவர் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி தேர்தல் களத்தில் இறங்கிய பிறகு, ஒவ்வொரு உரையும், ஒவ்வொரு நிகழ்வும் பெரிய பரபரப்பாக மாறிவருகிறது. சமீபத்தில், ஜர்னலிஸ்ட் மணி, “Joseph Vijay will be more dangerous than DMK” என்ற கூற்றை வலுவாக முன்வைத்துள்ளார்.

அவர் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இந்த பின்னணியில், விஜய்-யின் சமீபத்திய மாநாடு பேச்சுகள், தேர்தல் காம்பெயின் ஆகியவற்றையும் மக்கள் எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஜர்னலிஸ்ட் மணி பேச்சு – என்ன சொன்னார்?

மணியின் கூற்றுப்படி, விஜய் ஒரு DMK stooge என்று அவர் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சமீபத்தில் அவர், “விஜய் கிறிஸ்தவ பின்னணி காரணமாக, தேவாலய ஆதரவு அவருக்கு கிடைக்கும்.

எதிர்காலத்தில் உதயநிதி vs விஜய் என போட்டி வந்தால், விஜய்க்கு முழு ஆதரவு கிடைக்கும்” என்று கூறினார். அவர் கூடுதலாக, “மதுரையில் விஜய் பேசிய உரை, சில தேவாலயங்களில் live telecast ஆனது.

இதன் மூலம் Church support பற்றி கேள்விகள் எழுகின்றன” என்றும் குறிப்பிட்டார். இந்தப் பேச்சுகள் ஒருபுறம் விமர்சனத்தையும், மறுபுறம் விஜய்யின் அரசியல் சக்தியை மக்கள் எவ்வளவு கவனத்துடன் பின்தொடர்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

விஜய்-யின் சமீபத்திய பேச்சுகள் - தேர்தல் சூழ்நிலை

விஜய் தனது தேர்தல் Campiagn-இல் பேசுகளில், பொதுமக்களுக்கு நேரடி பிரச்சனைகளை சுட்டிக்காட்டி வருகிறார்:

  • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
  • கல்வி மற்றும் மருத்துவ வசதி
  • ஊழல் எதிர்ப்பு
  • வறுமை ஒழிப்பு

மதுரையில் நடந்த உரையில் அவர், “தமிழக அரசியலில் புதிய மாற்றம் தேவை” என்று வலியுறுத்தினார். இப்பேச்சு, DMK மற்றும் AIADMK மீது நேரடி தாக்குதலாகக் கருதப்பட்டது.

DMK-க்கு எதிரான விஜய்-யின் நிலைப்பாடு

DMK-வை விமர்சிக்கும் பல்வேறு பேச்சுகளை விஜய் தனது மாநாடுகளில் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, அரசியலில் குடும்ப ஆதிக்கம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை அவர் open-ஆக சாடியுள்ளார்.

இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றாலும், DMK ஆதரவாளர்கள் மற்றும் பிரசார ஊடகங்களில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. “DMK-வை விட விஜய் ஆபத்தானவர்” என்ற மணியின் கூற்று, இந்த அரசியல் சூழ்நிலைக்கு மேலாக spice சேர்த்துவிட்டது.

திமுகவை விட ஆபத்தான ஜோசப் விஜய்.. அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பிய Journalist மணியன்
tvk-dmk-vijay-mk-stalin
மக்கள் மனநிலை – விஜய்க்கு ஆதரவு அதிகரிக்கிறதா?

விஜய் ரசிகர்கள், அவரை “தமிழகத்திற்கு புதிய மாற்றத்தின் சின்னம்” என்று கருதுகிறார்கள். இளைஞர்களிடையே அவரது பேச்சுகள் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன. ஆனால், சில அரசியல் விமர்சகர்கள், “விஜய் அரசியல் அனுபவமில்லாதவர், Church அல்லது பெரிய சக்திகளின் ஆதரவால் தான் வளர்கிறார்” என்று கூறுகின்றனர்.

இவை இரண்டையும் ஒப்பிடும்போது, விஜயின் political image மக்கள் மனதில் serious alternative ஆக உருவாகிக்கொண்டிருக்கிறது.

Box Office ஹீரோவிலிருந்து அரசியல் ஹீரோவாக?

விஜய் சினிமா உலகில் Box Office King.

  • Leo – ₹600Cr+ worldwide gross.
  • Master – pandemic காலத்திலும் ₹250Cr+ வசூல்.

இந்த வரிசையில், சினிமாவில் பெற்ற standing-ஐ அவர் அரசியலிலும் பயன்படுத்தி வருகிறார். ரசிகர்கள் crowd-pull என்பது அவரின் மிகப்பெரிய plus. ஆனால், அரசியலில் crowd-ஐ vote-ஆக மாற்றுவது தான் சவால்.

2026 தேர்தல் – DMK vs AIADMK vs Vijay

2026 தேர்தல் சூழ்நிலையில், DMK மற்றும் AIADMK dominance-க்கு சவால் விடுபவர் விஜய் தான் என்று பலரும் கூறுகிறார்கள்.

  • அவர் தனியாக போட்டியிடுவாரா?
  • கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா?
  • முடவுகள் வெற்றியளிக்காவிட்டால் மீண்டும் சினிமாவுக்குத் திரும்புவாரா?

இந்த கேள்விகள் அனைத்தும் தற்போது ரசிகர்களிடமும், அரசியல் வட்டாரங்களிலும் பேசப்படும் முக்கிய விஷயங்களாக உள்ளன.

ஜர்னலிஸ்ட் மணி கூறிய "Joseph Vijay will be more dangerous than DMK" என்ற கூற்று, ஒரு அரசியல் பார்வையைக் காட்டுகிறது. ஆனால், ground reality என்னவென்றால் - விஜய்-யின் அரசியல் பயணம் தொடங்கியிருக்கிறது, மக்கள் அவரை தீவிரமாக கவனித்து வருகிறார்கள். அவர் Church ஆதரவு, ரசிகர் கூட்டம், DMK-க்கு எதிரான பேச்சு – இவை அனைத்தும் சேர்ந்து 2026 தேர்தலை மிகவும் interesting-ஆக மாற்றப் போகின்றன.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.