1. Home
  2. கருத்து

திட்டமிட்டு தவெக தலைவர் Vijay-யை பலவீனப்படுத்துவதற்கான முயற்சி

திட்டமிட்டு தவெக தலைவர் Vijay-யை பலவீனப்படுத்துவதற்கான முயற்சி

TVK Vijay - கரூரில் நடந்த அந்த துயரச்சம்பவம், தமிழ்நாட்டின் முழு மனசையும் குலுக்கியது. அந்த சம்பவத்துக்குப் பிறகு, விஜய் அவர்கள் அந்த 41 குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டமிட்டிருந்தார் என்ற தகவல் வந்தது. ஆனால் அது இன்னும் நடைமுறைக்கு வராததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதன்மையாக, அவருக்கு அனுமதி (Permission) கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு, அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யும் இடம் குறித்தும் தெளிவான அனுமதி கிடைக்கவில்லை. பல கல்யாண மண்டபங்களை முயற்சித்தபோதும், அவை அனைத்தும் திடீரென மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. “கிடைக்கலன்னு இல்ல... கிடைக்காமல் செய்துட்டாங்க!” என்பதே விஜய் தரப்பின் நிலைப்பாடு.

“அரசியல் தலையீடு தான் காரணம்!”

கரூரில் விஜய்க்கு மண்டபம் மறுக்கப்பட்டதின் பின்னணி குறித்து, சிலர் அரசியல் அழுத்தம் தான் காரணம் என கூறுகிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான மண்டபங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுடைய ஆதிக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால், அந்த வசதிகள் வழங்கப்படாமல் தடுக்கப்பட்டதாக விஜய்-யின் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். “ஆதிமுக ஆதரவு இருந்த மண்டபங்கள் கூட அந்த அழுத்தத்தால் இடம் தர முடியவில்லை” என்ற தகவலும் வந்துள்ளது.

இதனால், விஜய்யின் அணி இன்னும் இடம் தேடும் நிலையில் உள்ளது. அவர் கரூர் மக்களைச் சந்திக்காமல் இருப்பது திட்டமிடல் சிக்கல்களால்தான் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தவெக மீது திட்டமிட்ட அவதூறு பரப்பல்?

சமீபத்தில் விஜயையும், அவரது கட்சியையும் குறிவைத்து பல அவதூறு செய்திகள் பரவுகின்றன. “விஜய் குடிகாரர்”, “அவர் சோம்பேறி”, “அவர் காலை 6 மணிக்கு மேல வரமாட்டார்”, “திரிசா, கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட செய்திகளை” திட்டமிட்டு பரப்பப்படுகிறன எனக் கூறப்படுகிறது.

அதேபோல், தவெக முக்கிய உறுப்பினர்கள் குறித்தும் புதிய போலி குற்றச்சாட்டுகள் பரவுகின்றன. இது அனைத்தும் விஜய்-யை அரசியலில் பலவீனப்படுத்துவதற்கான முயற்சி என்று அவர் தரப்பு கூறுகிறது.

“ஜான் ஆரோக்கியசாமி குறித்த வதந்திகளும் தவறானவை”

தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி தவெக அணியில் இருப்பது காரணமாக அவர்மீது பல வதந்திகள் பரவுகின்றன. ஆனால், அரசியல் வட்டாரங்கள் கூறுவதாவது - அவர் ஒரு திறமையான நிபுணர்; பிரசாந்த் கிஷோருக்கே சமானமான திறமைசாலி என்று பலர் பாராட்டுகின்றனர்.

சிலர் அவருடைய தொலைபேசி உரையாடல்கள் வெளியானது பற்றி கூறினாலும், அது அரசியல் எதிரிகளின் முயற்சிதான் எனவும் குறிப்பிடப்படுகிறது. “ஜான் நேர்மையானவர், ஆனால் எளிதில் நம்பும் தன்மை உண்டு” என்பதே அவரை நன்கு அறிந்தவர்களின் கருத்து.

“விஜய் அமைதியா இருக்கிறார்னு, பயந்துட்டாரு என நினைக்காதீங்க!”

சில ஊடகங்கள், “கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய் பயந்துட்டாரு” என்று கூறியிருந்தன. ஆனால் நெருக்கமானவர்கள் கூறுவதாவது - விஜய் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் எப்போதுமே நிதானமான முடிவுகள் எடுக்கும் குணம் கொண்டவர்.

அவருக்கு அந்த 41 குடும்பங்களை சந்திக்கும் திட்டம் இன்னும் உள்ளது. ஆனால், அவர் செயல் எப்போதும் திட்டமிட்ட முறையில்தான் வரும். அந்த அமைதி, அவரின் பலம் - பயமல்ல. “விஜய் குணத்துல ‘பயத்துக்கு’ இடமே கிடையாது!” என அவரின் அணியினர் உறுதியாகக் கூறுகின்றனர்.

முடிவாக – அரசியலுக்கு புதிய நடைமுறை தேவை

இப்போதைய சூழலில், தவெக தனியாக தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. பாஜாகா, திமுக ஆகிய இரு கூட்டணிகளும் தங்களுக்குள் சிக்கி கொண்டுள்ளன. ஆனால் தவெக - “அமைதியா இருந்தாலும் உறுதியா இருக்கும்” என்ற வழியில் செல்கிறது.

விஜய்-யின் அரசியல் இன்னும் தொடக்க நிலையில் தான் இருக்கலாம், ஆனால் அவர் எடுக்கும் ஒவ்வொரு நகர்வும் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலுக்கான குரல் ஆக மாறி வருகிறது. இப்போது அவர் அமைதியா இருக்கிறார்... ஆனா அந்த அமைதியின் பின்னால ஒரு புயல் உருவாகிக்கிட்டே இருக்கு!

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.