தவிக்கும் விஜய்.. திமுக கூட பரவால இந்த 3 பேர சமாளிக்க முடியல
தமிழ்நாட்டு அரசியலில் புதுசு புதுசா பெயர்கள் வெளியில் வருது. ஆனால் சில நேரங்களில் சிலர் பேசுற வீடியோ தான் முழு அரசியலையும் கலக்கிவிடும். அப்படி தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளனர் மூன்று பேர். இவர்கள் தனித்தனியாக வெளியிடும் செய்தி, வீடியோ TVK (Tamilaga Vettri Kazhagam) பற்றிய தங்கள் எண்ணங்களையும் விமர்சனங்களும் ட்ரெண்டில் உலகம் பூரா சுத்துது.
அப்படி தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ள மூன்று பேர் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் மற்றும் GP முத்து. குறிப்பாக இவர்கள் பேசும் முறை சுவாரசியமாக இருக்கும் அதனால் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியுள்ளது.
அதிலும் சாட்டை துரை முருகன் பாரபட்சமே பார்க்கவில்லை. சமீபத்தில் வெளியான உரைகளில் விஜய் குறித்து கடுமையாக 'அவன்லாம் ஒரு ஆளு' என்ற அளவுக்கு பேசி பொளந்து தள்ளிவிட்டார். சில நேரங்களில் ஏதாவது நிகழ்வுகளை நகைச்சுவை நேர்மையுடன் விமர்சித்து கவனத்தை ஈர்ப்பார்.
இடும்பாவனம் கார்த்திக், சாட்டை அளவு இல்லை என்றாலும் TVK-வின் சில செயல்பாடுகளை நேரடியாக விமர்சித்து, “மக்கள் நலனுக்காக பேச வேண்டும்” என்ற ரீதியில் கருத்து தெரிவித்தார். அந்த பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே ஆமாம் போட வைக்கிறது.
இவர்களாவது அரசியலில் இருக்கிறார்கள் ஆனால் GP முத்து இணையதள காமெடியன். அவர் தைரியமா பேசி வெளியிடும் வீடியோ வியக்க வைக்கிறது. இவர் கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவற்றின் பின்னணியில் கரூர் சம்பவம் (Karur stampede) மிக பெரிய பாதிப்பாக உள்ளதும், அதனால் TVK தலைவர் விஜய் மக்களை சந்திக்காமல் இருப்பதுதான் காரணம். விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிவானது ஆனால் முடியவில்லை. மீண்டும் அவர் திட்டமிடுவதாக கட்சியின் அறிக்கைகள் மற்றும் பல செய்திகள் வருகிறது. ஆனால் 25 நாட்கள் கடந்துவிட்டது.
மொத்தத்தில், இந்த மூவரின் கருத்துக்கள் மற்றும் அவர்களால் வெளியான வீடியோ-போஸ்டுகள் TVK-வின் தற்போதைய நிலையை மிகவும் மோசமாக்கி விட்டது. அதிலும் ட்விட்டர் பக்கத்தை விஜய் பார்த்தால் கட்சியையே கலைத்து விடுவார்.
