1. Home
  2. கருத்து

விஜய்க்கு விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கான காரணங்கள்! செம பிளான்

vijay

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மூலம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், விசில், ஆட்டோ, மைக் உள்ளிட்ட 10 விருப்பச் சின்னங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில் கட்சியின் முதல் விருப்பமாக இருந்த விசில் சின்னத்தையே தேர்தல் ஆணையம் தற்போது வழங்கியுள்ளது.

இந்த குறிப்பிட்ட சின்னத்தை விஜய் தேர்ந்தெடுத்ததற்கும், தேர்தல் ஆணையம் அதனை ஒதுக்கியதற்கும் பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன:

விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிகில்  திரைப்படத்தின் அடையாளமாக 'விசில்' பார்க்கப்படுகிறது. அந்தப் படத்தில் அவர் ஒரு கால்பந்து பயிற்சியாளராக விசில் பயன்படுத்தியிருப்பார். இது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்பதால் இந்தச் சின்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மற்ற சின்னங்களை விட 'விசில்' என்பது கையில் எடுத்துச் செல்ல எளிதானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தொண்டர்களுக்கு விசில்களை வழங்கி ஒலிக்கச் செய்வதன் மூலம் மக்கள் கவனத்தை ஈர்ப்பது எளிது என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.

சுயேச்சை சின்னம்:

தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் அங்கீகரிக்கப்படாத புதிய கட்சிகளுக்கு வழங்கப்படும் 'சுயேச்சை சின்னங்கள்' (Free Symbols) வரிசையில் விசில் இடம்பெற்றிருந்தது. தமிழக வெற்றி கழகம் கேட்ட விருப்பப் பட்டியலில் இது முதலிடத்தில் இருந்ததால் முன்னுரிமை அடிப்படையில் இது ஒதுக்கப்பட்டது.

"தவறு நடக்கும் இடத்தில் விசில் சத்தம் ஒலிக்கும்" என்ற கருத்தியலை முன்னிறுத்தி, ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான ஒரு குறியீடாக இதை விஜய் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Cinemapettai Team
Vijay V

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.