தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் அனலைக் கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் தேர்தலில் ஈடுபடும் திமுகவினர் பிரச்சாரத்தின் போது மிகவும் ஆபாசமாகவும், பொதுமக்கள் அருவருக்கதக்க வகையிலும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் திமுகவிற்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் ஆளுங்கட்சியை குறை சொல்லி வாக்கு சேகரிக்கும் முறை சென்று, ஆபாசமாக பேசி வாக்கு சேகரிக்கும் முறை தற்போது திமுகவில் நிலவி வருகிறது.
மேலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மிகவும் ஆபாசமாக பேசுவதாகவும், மக்கள் அனைவரும் எரிச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக ராஜா தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்தும், அவருடைய தாயார் குறித்து மிகவும் ஆபாசமாக பேசியது மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ‘நான் பேசியதை வெட்டியும் ஒட்டியும் செய்திருக்கிறார்கள். நான் எதுவும் தவறாக பேசவில்லை. மக்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் எதுவும் செய்ய முடியாது’ என்று ஆணவமாக பதில் கூறினார் ஆ ராஜா.
ஆனால் இதற்கு முதல்வர், ‘ஒரு சாமானியர் முதல்வரானால் இப்படிதான் பேசுவார்களா?’ என்று கருத்து தெரிவித்தார். அதற்குப் பிறகு கட்சி தலைமை அறிவுறுத்தலின் பெயரில் வேண்டாவெறுப்பாக மன்னிப்பு கடிதத்தை கேமராக்கள் முன்னாடி வாசித்துவிட்டு ஆ ராசா சென்றார்.
இதனைத் தொடர்ந்து திமுகவின் அடுத்த வாரிசான உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘மத்திய அரசு சொன்னால் முதல்வர் அப்படியே கேட்பாரு. உட்கார உட்காருவாரு, முட்டி போடுவாரு, அப்புறம் என்ன செய்வாரு’ என்று தொண்டர்களை பார்த்து கேட்கும்போது, தொண்டர்களில் ஒருவர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் முதல்வரை விமர்சித்தார். தொண்டர்களை தூண்டி முதல்வரை பற்றி அவதூறாகப் பேச வைத்து விட்டு, ‘ஒரு முதல்வரை அப்படியா பேசுவீங்க.. அப்படியெல்லாம் பேசக் கூடாது’ எனக்கூறி தனது நடிப்பு திறமையை மேடையில் நிரூபித்தார் உதயநிதி ஸ்டாலின்.
மறுபுறம் கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தயாநிதிமாறன், அதிமுக நிர்வாகி ராஜேந்திரபாலாஜி சொன்னதாக சொல்லி, ‘ஜெயலலிதா எங்களுக்கு மம்மி, நரேந்திர மோடி எங்களுக்கு டாடி’ என்று மறைமுகமாக விமர்சித்தார்.
எனவே, திமுக ஆட்சியைப் பிடிப்பதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு சாட்சி அளிக்கும் வகையில் இந்த பிரச்சாரங்கள் அமைந்து வருவதோடு, வாக்காளர்கள் அனைவரையும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது.