வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பெரியாரை மறந்து விட்ட எதிர்க்கட்சி.? முன்னணித் தலைவர்களை புறக்கணித்ததால் அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தமிழகத்தில் திமுக கட்சியை, கலைஞர் கருணாநிதி அவர்களை தொடர்ந்து அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று ஸ்டாலின் தலைமை பகுதியை வகித்துள்ளார். சமீபத்தில் அவரை தொடர்ந்து அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி தலைவர் என்ற பதவியை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக கட்சியின் முன்னணி தலைவர்கள் யாரையுமே கலந்து ஆலோசிக்காமல் தானாகவே இம்முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் ஏற்கனவே கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடைசியில் மு.க.ஸ்டாலின் தனது கட்சி உறுப்பினர்களுக்கு விடுத்த அறிக்கையில், “அண்ணா, கலைஞர் மற்றும் ஸ்டாலின் ஆகிய பெயர்களும், புகைப்படங்களும் மட்டுமே அனைத்து பேனர்களிளும், போஸ்டர்களிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கட்சியின் முன்னணித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஸ்டாலின் நடந்துகொள்வது கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது கட்சியை சேர்ந்த அனைவரையும் முகம் சுழிக்கும் படி செய்து விட்டது.

மேலும் துரைமுருகன் சார்ந்த பகுதியில் கடைசியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு திமுக கட்சியினர் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் திருஉருவங்களை வடிவமைத்து, அதை வண்ண நிற ஒளியுடன் மக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். இதனை பார்வையிட்டவர்கள், “திமுக என்ற மாபெரும் கட்சியை உருவாக்கிய ‘பெரியாரை’ மறந்து விட்டனரா?” என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இவ்வாறு தன்னலமாக செய்படுகின்ற திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பிரபல ஐபேக் நிறுவனத்திற்கு செவிசாய்த்து, அதற்கேற்றவாறு ஜால்ரா தட்டி வருவது அக்கட்சி தொண்டர்களையே கலங்கடித்துவிட்டது. மேலும் இவரின் இச்செயல் உதிக்கின்ற சூரியனாக இருக்கும் திமுக கட்சிக்கு அஸ்தமனத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வி எழத் தொடங்கிவிட்டது.

Trending News