புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

எதிர்க்கட்சி ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர்!

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தற்போது அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகள் தின நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் உரையாற்றி உள்ளார். அப்பொழுது பேசிய தமிழக முதல்வர், திமுகவில் அவரது குடும்பத்தினரை தவிர வேறு யாரும் ஆட்சி பொறுப்பிற்கு வர வாய்ப்பில்லை.

எனவே திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி, அது கட்சி கிடையாது. மேலும் ஸ்டாலின் தான் அதற்கு சேர்மன் மற்றும் கனிமொழி, தயாநிதி மாறன் எல்லோரும் ஞானஸ்தர்கள். ஆகையால் அந்த கட்சியில் மட்டும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரையும் கட்சியிலும், ஆட்சியிலும் வர விடமாட்டார்கள்.

மேலும் திமுகவில் கருணாநிதி ஆட்சிக்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின், தற்போது ஸ்டாலின் மகன் உதயநிதி என தொடர்ந்து அவர்களது குடும்ப உறுப்பினர்களே குடும்ப அரசியல் செய்யும் திமுக கட்சியை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

eps-cinemapettai

அதுமட்டுமில்லாமல் மக்கள் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் 234 தொகுதிகளை வெல்ல போவதாக சபதம் எடுத்தார். அதன்பின்பு 200 தொகுதிகள் என்று இரண்டே நாளில் 34 தொகுதிகளை குறைத்து கூறியது அக்கட்சியின் அவநம்பிக்கையை குறிக்கிறது.

எனவே அவர்களுக்கு வெறும் 34 தொகுதி மட்டுமே கிடைக்கும். அது கூட அந்த குடும்ப கட்சிக்கு கிடைக்காமல் போகலாம் என்றும் தமிழக முதல்வர் கடுமையாக விமர்சித்துள்ளார்

Trending News