வரும் மே மாதத்தில் நடக்கவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தங்களது கூட்டணி கட்சிகளையும் விறுவிறுப்பாக தேர்வு செய்ய தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் 200 தொகுதிகளில் நிற்கபோகும் எதிர்கட்சியான திமுக-வில், உறுதி செய்யப்படாத கூட்டணிக் கட்சிகளால் குழப்பம் நிலவி வருகிறது.
அதேபோல் மூன்றாவது அணி உருவாக்கிவிட்டால், வாக்கு சிதறி விடுமோ? என்ற தோல்வி பயத்தில் மக்கள் நீதி மய்யத்தை தற்போது திமுக அணுகி உள்ளது.
ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமலஹாசன். ‘தூது வந்தது. ஆனால் தலைவரிடமிருந்து வரவேண்டும்’ என்ற கருத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
ஏனென்றால் மூன்று சதவீத வாக்கு வங்கி உள்ள மக்கள் நீதி மய்யத்தை அணுகும் அளவுக்கு திமுக கலக்கத்தில் உள்ளதாக தற்போது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது.
ஆகையால் தற்போதைய சூழலில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.