திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

முக அழகிரியின் அதிரடி முடிவு.. கலங்கிப் போன எதிர்க்கட்சி!

கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுக தலைவர் பதவியை வகிக்கும் ஸ்டாலின் ‘கிச்சன் கேபினட்’ இன் ஆலோசனைப்படி சொந்த சகோதரரான அழகிரியை கட்சியில் இருந்தே ஒதுக்கி வைத்துள்ளார்.

அதன்பிறகு அவருடைய சகோதரி செல்வி உள்ளிட்ட சில உறவினர்கள் இருவருக்கும் சமாதானம் பேச முயன்றாலும், அதனை ஸ்டாலின் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் அழகிரி இவ்வளவு நாள் ஆதரவாளர்களுடன் பொறுமையாக இருந்த நிலையில், தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி விட்டார்.

ஏனென்றால் முக அழகிரி, குழு ஒன்றை அமைத்து, அந்த குழுவினர் திமுகவினரால் ஒதுக்கப்பட்டவர்களையும், ஸ்டாலினால் நிராகரிக்கப்பட்டவர்களையும் தொடர்புகொண்டு தங்கள் வசம் இழுக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஏனென்றால் வரும் சட்டப் பேரவைத் தேர்தலின்போது சுமார் 75 முதல் 100 தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை நிறுத்தி திமுகவின் வாக்குகளை பிரிக்க அழகிரி திட்டமிட்டுள்ளார்.

mk-alagiri-cinemapettai

இதன்மூலம் ‘ஸ்டாலினின் முதல்வர் கனவு, கனவாகவே போய் விடவேண்டும். அது நிச்சயம் நடக்கக்கூடாது’ என்பதில் அழகிரி திட்டவட்டமாக உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ‘எனக்கு இரண்டு கண்கள் போனாலும் கவலை இல்லை, எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலின் முதல்வராக விடமாட்டேன்’ என்பதை அழகிரியின் தற்போதைய மனநிலையாக உள்ளது.

இதையெல்லாம் அரசல்புரசலாக கேட்ட திமுக நிர்வாகிகள் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News