வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக தற்போது தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய கூட்டணி கட்சிகளை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.
அந்த வகையில் தற்போது உலகநாயகன் கமலஹாசன் புதிதாக தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியானது எதிர்க்கட்சியான திமுகவுடன் கைகோர்த்துள்ளது. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய கட்சிக்கு வலு சேர்ப்பதற்காக பல்வேறு யுத்திகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் எதுவும் செல்லுபடியாகவில்லை. இருப்பினும் ஐபக் கொடுக்கும் ஐடியாவை அப்படியே திமுக பின்பற்றி வருவதால், திமுகவில் கார்ப்பரேட் கம்பெனி என்று அழைக்க தொடங்கிவிட்டனர்.
அதுமட்டுமில்லாமல் தற்போது திமுக வெளியிட்டுள்ள வீடியோவில், திமுக கட்சியின் தலைவராக ஸ்டாலின் மற்றும் ஐபக் நிறுவனத்தில் பணிபுரியும் சில நபர்களுடன் “ஸ்டாலின் தான் வர்றார்,விடியல் தர போறாரு” என்ற பிரச்சார பாடலுக்கு நடனம் ஆடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வீடியோவானது தற்போது திமுகவின் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடப்பட்டு காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனைப் பார்க்கும்போது பாரம்பரிய திராவிட கட்சி இந்த அளவிற்கு தரம் கெட்டு ஒரு நாடகக் கம்பெனி போல மாறி விட்டதே என சிலர் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், திமுக கட்சியின் தன்மானத்தை விட்டுக் கொடுப்பதாக தங்கள் ஆதங்கத்தை திமுக தொண்டர்கள் வெளிப்படுத்துகின்றனர்.