Oru Nodi Movie: கடந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். திரும்பும் பக்கம் எல்லாம் லோ பட்ஜெட் படங்கள் கோடி கணக்கில் வசூலை அள்ளிக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் நிறைய தமிழ் படங்களின் மீது இந்திய ரசிகர்களின் பார்வை திரும்பியது.
ஆனால் இந்த வருடம் ஆரம்பித்து ஐந்து மாதங்களாகியும் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படமும் வெளியாகவில்லை, இது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு ஏக்கம் என்றால் அக்கட தேசத்து படங்கள் எல்லாம் இங்கு ரிலீசாகி கோடிக்கணக்கில் அள்ளி சென்றது பெரிய ஏமாற்றமாகவே இருந்தது.
இது என்னடா தமிழ் படங்களுக்கு வந்த சோதனை என்று நான்கு ஐந்து மாதங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருந்தார்கள் கும்மிய இருட்டில் கிடைத்த மெழுகுவர்த்தி வெளிச்சம் போல் தமிழ் சினிமாவை தலை நிமிர செய்திருக்கும் படம் தான் ஒரு நொடி.
இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார் நிகிதா எம் எஸ் பாஸ்கர் வேலராமமூர்த்தி ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். வாங்கிய கடனை கொடுப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் எம் எஸ் பாஸ்கர் காணாமல் போனதை அடுத்து ஹீரோ தமன் குமார் அந்த வழக்கை விசாரிக்கிறார்.
கமல் பாணியில் கார் பரிசளித்த தயாரிப்பாளர்
அதே நேரத்தில் நிகிதா என்னும் இளம் பெண் எதிர்பாராத விதத்தில் கொலை செய்யப்படுகிறார். இந்த இரு வேறு வழக்கை விசாரிப்பது தான் இந்த படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் யார் என்ன செய்திருப்பார் என்று கொஞ்சம் கூட கெஸ் பண்ண முடியாத திரைக்கதை.அமைப்பு.
தமிழ் சினிமா ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் திரில்லர் கதை. ஆரம்பத்தில் படம் ரிலீஸ் ஆனது வெளியில் தெரியாத அளவுக்கு இருந்தது. தற்போது பெரிய தியேட்டர்களில் காட்சிகளை அதிகரிக்கும் அளவுக்கு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்திருக்கிறது.
இதனால் படத்தின் தயாரிப்பாளர் ரித்தேஷ் ரொம்பவும் மனம் குளிர்ந்து போயிருக்கிறார். இயக்குனரை பாராட்டும் விதத்தில் அவருக்கு கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். கடந்த வருடம் ரிலீசாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற போர் தொழில், டாடா, குட் நைட் படங்களின் வரிசையில் தற்போது இந்த படம் இணைந்திருக்கிறது.