இந்த பிரபலம் ஆஸ்கர் என்ற மிகப்பெரிய விருதினை தன் அடையாளமாக கொண்டுள்ளார். ஆரம்பகாலங்களில் விநியோகஸ்தராக இருந்த விஜயகாந்தின் வானத்தைப்போல திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். இவர் தயாரிப்புக்காக பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் காத்திருப்பார்கள்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆஸ்கர் ரவிச்சந்திரன், ஆரம்பத்தில் சிறிய பட்ஜெட்டில் படங்கள் தயாரித்து வெற்றி பெற்றார். பின்பு பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து அதிகம் லாபம் பெற்றார். ஜாக்கிசான் நடித்தப் படங்களை வாங்கி விநியோகித்து வந்தார். இவர் தமிழில் ரமணா, அந்நியன், ரெண்டு, தசாவதாரம், வாரணம் ஆயிரம், ஆனந்தத்தாண்டவம், மரியான், ஐ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஐ படத்திற்காகவும், அதே நேரத்தில் மற்ற படங்கள் தயாரிக்கவும் ஒரு வங்கியிடம் பல கோடி கடன் பெற்றுள்ளார். கடன் இருக்கும்போது ஐ படம் வெளியானது. ரவிச்சந்திரன் பெரிதாக நம்பி இருந்த வேலாயுதம் படங்கள் எதிர்பார்த்த அளவு லாபத்தைத் தரவில்லை.
இதனால் அவர் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. வங்கியில் பெற்ற கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரனின் 150 கோடி சொத்துக்கள் ஏலத்துக்கு வருகிறது. ரவிச்சந்திரனின் கேகே நகரில் உள்ள அனைத்து சொத்துக்களும் ஏலத்துக்கு வருகிறதாம்.
சமீபத்தில் அந்நியன் படத்தை இயக்குனர் ஷங்கர், ரன்வீர் சிங்கை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கதை உரிமம் என்னிடம் தான் உள்ளது.
அந்நியன் படத்தின் ரீமேக்கை ஜாக்கிசானை வைத்து எடுக்க உள்ளதாக தெரிவித்தார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் இந்த நிதி நெருக்கடியில் அந்நியன் படத்தின் ரீமேக்கை எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.