வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் சேதுபதியை ஓரம் கட்டு வந்த 800 பட ஹீரோ.. முத்தையா முரளிதரனாக நடிக்கவிருக்கும் ஆஸ்கார் பட நடிகர்

சமீபகாலமாகவே பயோபிக் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரபல சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து 800 என்கின்ற படத்தை ஸ்ரீபதி என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியான போது, அதில் விஜய் சேதுபதி தான் முத்தையா முரளிதரன் ஆக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி இந்த பயோ பிக்கில் நடிக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் எதிர்ப்பு அதிகமாகவதை அடுத்து அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Also Read: விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து மிரண்டுபோன பிரபலம்.. பகையை மறந்து பாராட்டிய சம்பவம்

அந்த வேண்டுகோளை ஏற்று 800 படத்திலிருந்து விஜய் சேதுபதியும் விலகி விட்டார். அவருக்கு பதில் இப்போது வேறு ஒரு நடிகரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதற்கான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிறது.

இதில் முத்தையா முரளிதரன் ஆக பாலிவுட் நடிகர் மதுர் மிட்டல் என்பவர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பாலிவுட்டில் மைதான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதிக்கு பதில் நடிக்கபோவது இவர்தான்.. உங்களுக்கு செட் ஆகுறது கஷ்டம்தான்

இந்த படத்தை எம். எஸ் ஸ்ரீபதி இயக்க, ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே எல் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் மதுர் மிட்டல் உடன் மஹிமா நம்பியார், நாசர், நரேன், வேலராமமூர்த்தி, வடிவுக்கரசி, அருள்தாஸ், ரித்விகா, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.

800 படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர் இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ளனர். மேலும் தற்போது 800 படத்தின் மோஷன் போஸ்டர் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

800 படத்தின் மோஷன் போஸ்டர்

800-movie-poster

800-movie-posterAlso Read: ஜாதி பெயரை சொல்லி போடப்பட்ட வழக்கு! விஜய் சேதுபதி அவர் பாணியில் கொடுத்த பதில்

Trending News