என்னதான் ஆயிரம் விருதுகள் வாங்கினாலும் ஒரு ஆஸ்கரு(oscar 2021)க்கு சமம் இல்லை என்று சும்மாவா சொன்னார்கள். தரமான படங்களை தேர்ந்தெடுத்து விருது தருவதில் ஆஸ்கார் விருதை அடித்துக் கொள்ள ஆளில்லை.
அந்த வகையில் 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிட்ட ஐந்து படங்கள் மட்டுமே தலா இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த அனிமேஷன் ஆகிய இரண்டு விருதுகளையும் சோல்(soul) என்ற திரைப்படம் பெற்றுள்ளது. அதேபோல் சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பு ஆகிய பகுதிகளில் சவுண்ட் ஆஃப் மெட்டல்(sound of metal) என்ற திரைப்படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து மங்க்(Mank) என்ற திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. மேலும் பிளாக் பாட்டம்(Ma Rainey’s Black Bottom) என்ற திரைப்படம் சிறந்த ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளது.
சிறந்த படத்துக்கான விருதையும், சிறந்த இயக்குனருக்கான விருதையும் நோ மேட்லாண்ட்(Nomadland) என்ற திரைப்படம் பெற்றுள்ளது. ஆக மொத்தத்தில் இந்த வருடம் ஆஸ்கர் விருதில் இந்த 5 படங்கள் மட்டுமே அனைத்து பகுதிகளிலும் பட்டையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட சூரரைப் போற்று திரைப்படம் தகுதிச் சுற்றில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.