ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒத்த செருப்பு நல்ல படம் இல்லை.. பார்த்திபன் எவ்வளவு கஷ்டப்பட்டாரு பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தவர் பார்த்திபன். அப்படி பல வருடம் காத்திருந்து கதை எழுதி படம் எடுத்தாள் எளிதாக இது ஒரு படமே இல்லை என்று கூறி விடுகின்றனர் டிஸ்ட்ரிபியூட்டர். கொரோனாவிற்கு முன் பல படங்கள் தொடர்ந்து திரையரங்கில் வெளியிடப்பட்டு வந்தன.

ஆனால் எந்த ஒரு படமே நிலைத்து நிற்பதில்லை ஒரு நாள் இரண்டு நாள் மட்டுமே ஓடிவிட்டு அதன்பிறகு தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை நீக்கி விட்டு மற்றொரு படத்தை போட்டு விடுகின்றனர். அதற்கு காரணம் படத்தின் பெரும்பாலான ரசிகர்கள் பார்க்க வருவதில்லை என்பதுதான்.

தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம் ஒத்த செருப்பு இப்படத்தினை பல பிரபலங்களும் பாராட்டினர். ஆனால் இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என திருச்சியின் தியேட்டர் உரிமையாளர் ஸ்ரீதர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒத்த செருப்பு ஒரு சிறப்பான படம் அதற்குப் பார்த்திபனின் உழைப்பு பெரிது. இதனை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் இப்படத்தினை பார்ப்பதற்கு ரசிகர்கள் யாரும் பெரிய அளவில் தியேட்டருக்கு வரவில்லை. அதனால் தான் ஆப்படத்தை தியேட்டரில் இருந்து எடுத்து விட்டு மற்றொரு படத்தை போட்டதாக கூறியுள்ளார்.

மேலும் ஒத்த செருப்பு படம் வந்த பொழுது தான் காப்பான் படமும் வெளியானது. காப்பான் படமும் ஓடவில்லை, ஆனால் இப்படத்தை மட்டும் போட்டீர்கள் என கேட்டனர். அதற்கு காப்பான் படம் பல மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ளனர்.

சூர்யா, ஆர்யா மற்றும் மோகன்லால் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதனால் தியேட்டரில் போட்டால் படம் ஓடும் என்பதால் படத்தை போட்டதாக கூறினார்.

trichy-sridhar
trichy-sridhar

Trending News