படத்திற்கு பொருத்தமான கதாபாத்திரம்அமையவில்லை என்றால் அந்த படத்தில் எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்துயிருந்தாலும் தோல்வியடைந்துவிடும். உதாரணத்திற்கு பாகுபலி படத்தில் பிரபாஸ், கட்டப்பா போன்ற கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் எப்படி இருக்கும்.
அதேபோல் பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தவிர வேறு எந்த நடிகராவது இந்த படத்தில் நினைத்துப் பார்க்க முடியுமா.ஒரு சில படங்களில் அந்த நடிகர்கள் நடித்தால் மட்டுமே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் அப்படி மற்ற மொழிகளில் ஹிட்டாகி தமிழில் பிளாக் ஆன படங்களைப் பற்றி பார்ப்போம்.
கஜேந்திரா: தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் சிம்மஹரி. இப்படத்தை தமிழில் விஜயகாந்தை வைத்து கஜேந்திரா என்ற பெயரில் படத்தை எடுத்தனர்.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் 24வது ஹீரோவாக நடித்திருப்பார். ஆனால் தமிழில் 50 வயது நிறைந்த விஜயகாந்த் படத்தில் நடிக்க வைத்தது படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஒஸ்தி: ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளியாகி வேற லெவல் ஹிட்டான திரைப்படம்தான் தபாங். சல்மான் கானின் லைஃப்ல மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆனால் இதே படத்தை ஒஸ்தி எனும் பெயரில் சிம்புவை வைத்து எடுத்தனர். படத்தின் பாடல்கள் ஹிட் ஆனாலும் படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக பிளாக் ஆனது.
தில்லாலங்கடி: தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டான திரைப்படம்தான் கிக். இதே படத்தை ஜெயம் ரவியை வைத்து அவரது அண்ணனான மோகன்ராஜா தில்லாலங்கடி என்னும் பெயரில் இயக்கியிருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது.
ஏகன்: இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம்தான் மேஹூநா. இப்படத்தை தமிழில் அஜித்தை வைத்து ஏகன் எனும் பெயரில் வெளியானது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய தோல்வியடைந்தது.
பெங்களூர் நாட்கள்: மலையாளத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம்தான் பெங்களூர் டேஸ். ஆனால் இப்படத்தை தமிழில் ஆர்யா பாபி சிம்ஹா மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்தனர். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது.
டெம்பர்: தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் டெம்பர் படம் மிகப் பெரிய ஹிட்டானது. ஆனால் அதே படத்தை தமிழில் அயோக்யா எனும் பெயரில் விஷால் நடித்து மிகப்பெரிய தோல்வியடைந்தது.
ஜூலாயி: தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம்தான் ஜூலாயி இப்படத்தினை தமிழில் பிரசாந்தை வைத்து சாகசம் எனும் பெயரில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது.
என்னமோ ஏதோ: நானி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் அல முதலந்தி எனும் பெயரில் இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. ஆனால் தமிழில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது.
குசேலன்: மம்முட்டி மற்றும் ஸ்ரீனிவாசன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் கத பறையும் போல்.சாதாரண நண்பனுக்கும் பிற்காலத்தில் மிகப்பெரிய ஸ்டாராக வளர்ந்து வரும் தன் நண்பனை பார்த்து பெருமைப்படும் கதையாக இப்படம் அமைந்திருக்கும்.
இப்படத்தினை தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் குசேலன் எனும் பெயரில் வெளியாகி ரஜினிகாந்த் வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படம் என்ற பெயரைப் பெற்றது. இப்படத்தின் தோல்வி மூலம் பல பிரச்சனைகளை சந்தித்தார் ரஜினிகாந்த்.
சேட்டை: இர்ஃபான் கான் நடிப்பில் வெளியான திரைப்படம் டெல்லி பெல்லி. இப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இப்படத்தை அப்படியே தமிழில் ஆர்யா, சந்தானம் மற்றும் பிரேம்ஜி நடிப்பில் சேட்டை எனும் பெயரில் படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது.
மேற்கண்ட படங்கள் அனைத்தும் மற்ற மொழியில் மிகப் பெரிய ஹிட்டாகி. தமிழில் படத்தின் ஒருசில காட்சிகள் மற்றும் நடிகர்கள் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது.