வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டாப் 5 நடிகர்களின் படங்களை கைப்பற்றிய OTT நிறுவனங்கள்.. போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய நெட்பிளிக்ஸ், அமேசான்

சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்கு பின்பு ஓடிடியில் வெளியாகி வருகிறது. அதிக அளவு ஓடிடியிலும் ரசிகர்கள் படத்தை பார்த்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் கமலஹாசனின் விக்ரம் படம் ஓடிடியில் நல்ல லாபத்தை பெற்றது. இதற்காக டாப் நடிகர்களின் 5 படங்கள் ஓடிடி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.

வாரிசு : தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் இப்படத்தை கைப்பற்றியுள்ளது.

Also Read :வாரிசு ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி.. எந்த அலப்பறையும் இல்லாமல் விலகிய அஜித்தின் AK61

துணிவு : வலிமை, நேர்கொண்ட பார்வை படங்களைத் ஹெச் வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் படம் துணிவு. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இப்போது நெட்பிளிக்ஸ் துணிவு படத்தின் ஓடிடி உரிமையை பெற்றுள்ளது.

ஜவான் : அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி வரும் படம் ஜவான். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வர உள்ளது. மேலும் ஜவான் படத்தை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது.

Also Read :டைட்டிலுக்காக மெனக்கெட்ட வினோத்.. துணிவு வந்த கதை இதுதான்

பொன்னியின் செல்வன் : மணிரத்தினம் இயக்கத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்திருக்கும் படம் பொன்னியின் செல்வன். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன் பின்பு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

பிரின்ஸ் : அனுதிப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரின்ஸ். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் திரையரங்கு வெளியீட்டுக்கு பின் ஒளிபரப்பாகும்.

Also Read :தூக்கிவிட்டவரை மறந்து சிம்புவை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. வெளிப்படையாக உண்மையை போட்டுடைத்த நடிகர்

Trending News