Indian 2: பொதுவாக கமல் படம் என்றாலே வியாபார ரீதியாக பெருத்த லாபத்தை எதிர்பார்க்க முடியாது. அதனாலேயே பல படங்கள் நஷ்டமடைந்து கமலுக்கு வெற்றியை கொடுக்காமல் போயிருக்கிறது. ஆனால் திடீரென்று வந்த லோகேஷ் கமலுக்கு கை கொடுக்கும் விதமாக விக்ரம் படத்தை எடுத்து அதீத லாபத்தை கொடுத்து கமலை தூக்கி விட்டார். இதன் பிறகு கமலுக்கு அடுத்தடுத்த படங்களில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் எல்லாம் தலைகீழப் போய்விட்டது.
அதாவது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பகுதி சொல்ல முடியாத அளவிற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாக தோல்வியடைந்து விட்டது. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத இப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா அதிகளவில் நஷ்டம் அடைந்து இருக்கிறார். இவர் மட்டும் இல்லாமல் இப்படத்தை விநியோகம் செய்த பலரும் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள்.
ஓரமாக நின்னு வேடிக்கை பார்க்கும் நாயகன்
இதனால் இந்தியன் 3 படத்தை எப்படி வியாபாரம் செய்வது என்று தெரியாமல் முழித்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அதிரடியாக முடிவு எடுத்து விட்டார். அந்த வகையில் இந்தியன் திரைப்படத்தை இனி தியேட்டரில் ரிலீஸ் பண்ண வேண்டாம். ஓடிடி நிறுவனத்தில் நேரடியாக விற்று விடலாம் என்று நெட்பிலிக்ஸ் இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால் ஏற்கனவே வாங்கின இந்தியன் இரண்டாம் பாகத்திற்கு கொஞ்சம் கூட லாபம் கிடைக்காத பொழுது எப்படி மூன்றாவது பாகத்தை வாங்க முடியும் என்பதால் அவர்கள் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வருகிறார்கள். ஆனால் தற்போது லைக்காவிற்கு வேறு வழியில்லை netflix என்ன விலைக்கு நிர்ணயம் செய்கிறார்களோ அந்த விலைக்கு தான் கொடுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறது.
அதே மாதிரி netflix நிறுவனமும் இந்தியன் 2 படத்தில் விட்டதை எப்படியாவது இந்தியன் 3 படம் ஈடு செய்யுமா என்ற நம்பிக்கையில் வாங்க முடிவெடுத்து இருக்கிறார்கள். ஆனால் லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம் நடிப்பு சூறாவளி கமல் நடித்த படம் ஏற்கனவே வசூல் அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படம் என்பதால் கண் மூடித்தனமாக பணத்தை வாரி இறைத்து செலவு செய்தார்.
ஆனால் இப்பொழுது போட்ட காசுக்கு மோசம் என்பதற்கு ஏற்ப மொத்தமாக ஷங்கர் இந்தியன் படத்தில் கமலை வைத்து சர்க்கஸ் காட்டிவிட்டார். இதனால் போற இடம் எல்லாம் சங்கருக்கு பெருத்த அவமானம் என்று சொல்லும் அளவிற்கு கேலியும் கிண்டலுக்கும் ஆளாகி விட்டார். இந்நிலையில் தெலுங்கில் ராம்சரனை வைத்து இயக்கி வரும் கேம் சேஞ்சர் படமும் எந்த மாதிரியான லாபத்தை கொடுக்கும் என்று தயாரிப்பாளர் பீதியில் இருக்கிறார்.
இதனை அடுத்து சங்கரை நம்பி இனி எந்த தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் பணத்தை போடுவது மிகப்பெரிய சந்தேகம் தான். இதுவரை கஷ்டப்பட்டு எடுத்த பெரும் புகழையும் ஒத்த படத்தின் மூலம் கெடுத்துக்கொண்டார். ஆனால் இதில் எனக்கு எந்த சம்பந்தமே இல்லை என்பதற்கு ஏற்ப கமல் ஓரமாக நின்னு வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறார்.
- Indian 2: 3 பெரிய பட்ஜெட் படங்களுக்கு வாரி இறைத்த லைக்கா
- Shankar: 1000 கோடி பட்ஜெட்டுக்கு சங்கர் வீசிய வலை
- 2 ஹீரோக்களுடன் சங்கர் நடத்தும் பேச்சுவார்த்தை