திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Vijay Sethupathi : விஜய் சேதுபதி தொடங்கிய புதிய ஓடிடி.. 800 படங்களுடன் நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு ஆட்டம் காட்ட செய்த சூட்சமம்

இப்போது தியேட்டரை காட்டிலும் ஓடிடி தான் ரசிகர்களின் பிரியமான தளமாக இருந்து வருகிறது. ஏனென்றால் தியேட்டருக்கு செல்வதான நேரம் மற்றும் டிக்கெட் செலவு ஆகியவற்றை ஒப்பிடும்போது ஓடிடி மிகவும் குறைவாக உள்ளது.

அதிலும் விடுமுறை நாட்களில் வீட்டுக்குள்ளேயே தங்களது அறையிலேயே புதிய படத்தை பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர். இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி நிறுவனங்கள் வாரம் வாரம் நிறைய படங்களை வெளியிட்டு வருகிறது.

இப்போது அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியோருக்கு ஆட்டம் காட்ட போகிறார் விஜய் சேதுபதி. அதாவது பெரிய நடிகர்கள் விரைவில் கல்லா கட்ட வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி வருகிறார்கள்.

விஜய் சேதுபதி தொடங்கியுள்ள ஓடிடி நிறுவனம்

ஆனால் இப்போது ட்ரெண்டிங்கில் ஓடிடி தளங்கள் இருப்பதால் விஜய் சேதுபதி ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதாவது சமீபத்தில் விஜய் சேதுபதி பட இயக்குனர் சீனு ராமசாமி ஒன் பிளஸ் என்ற ஒடிடி தளத்தை தொடங்கினார்.

மாதம் வெறும் 29 ரூபாயில் 800க்கும் மேற்பட்ட படங்களை இதில் கண்டு களிக்கலாம். மற்ற ஓடிடி நிறுவனங்கள் மாதத்திற்கு 200 ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. ஆகையால் இதில் மிகவும் குறைந்த தொகையை வைத்தால் கண்டிப்பாக மக்கள் பார்ப்பார்கள் என்ற சூட்சமத்தை செயல்படுத்தியுள்ளனர்.

சீனு ராமசாமி விஜய் சேதுபதியின் மாமனிதன், தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர்களுக்குள் நட்பை தாண்டி ஒரு நெருங்கிய உறவு இருந்து வருகிறது. இதனால் சீனு ராமசாமி முன்னிலைபடுத்தி விஜய் சேதுபதி தான் இந்த ஓடிடி நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

பெரும்பாலான நடிகர்கள் வேறு ஒருவரின் பெயரில் சைலன்ட் பார்ட்னர் ஆக இருப்பார்கள். அதேபோல் தான் பின்னால் இருந்து இந்த நிறுவனத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Trending News