புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஏ.ஆர்.ரஹ்மான் இத்தனை Film Fare விருதுகள் வாங்கியிருக்காரா? ரெண்டு விருதுகள் பெறக் காரணமான OTT தொடர்கள்

ஏ.ஆ.ரஹ்மான் இசையமைத்த இரண்டு தொடர்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு, ஆஸ்கருக்கும் சென்றுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் ஃபிலிம் பேர் ஓடிடியில் வெளியாகும் தொடர்களுக்கும், படங்களுக்கும் விருது வழங்கத் தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும், கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டைச் சேர்ந்த படங்கள் ஓடிடி விருதுக்கு போட்டியிட்டு வருகின்றன. இந்த ஆண்டு, இம்பதியாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான தொடர் அமர்சிங் சம்கில்லா. அத்துடன் ரயில்வே மென் தொடரும் அதிக விருதுகள் பெற்றுள்ளன.

15 முறை ஃபிலிம்பேர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான்

அமர்சிங் சம்கில்லா பட த்திற்கான சிறந்த பிஜிஎம், மியூசிக் ஆல்பம் பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகள் வென்றார்.

இப்படம் சிறந்த படம் , சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இசை ஆல்பம், சிறந்த எடிட்டிங், சிறந்த வசனம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வென்றுள்ளது.

இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் 15 ஃப்லிம்பேர் விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News