1. Home
  2. ஓடிடி

இந்த வாரம் ஓடிடியில் புத்தம் புதிய படங்கள்.. பார்க்க வேண்டிய லிஸ்ட் இதோ!

the-girlfriend

டிசம்பர் 5 முதல் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் சுருக்கமான பட்டியல்.


ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் வெளியாகும் புதிய படங்களும் வெப் சீரிஸ்களும் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவங்களை தருகின்றன. குடும்பத்துடன் பார்க்கும் லைட்-காமெடி, தனியாக ரசிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர், நண்பர்களுடன் சிரிக்கும் எண்டர்டெயின்மென்ட் –எதை விரும்பினாலும் இப்போது ஓடிடி-யில் கிடைக்கிறது. இந்த வாரமும் பல எதிர்பார்ப்பை கிளப்பிய படங்கள், புதிய கதைக் கோட்டைக் கொண்ட வெப் சீரிஸ்கள், த்ரில்லராக கட்டிப்பிடிக்கும் சஸ்பென்ஸ் டிராமாக்கள் பல தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன.

நடு சென்டர் வெப் சீரிஸ்

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகும் அரசியல்,காவல்துறை பின்னணியை மையமாகக் கொண்ட வெப் சீரிஸ் ‘நடு சென்டர்’ இந்த வாரம் தனது 7, 8, 9ஆம் எபிசோடுகளை வெளியிட்டுள்ளது. சீரிஸ் ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக பரபரப்பை கிளப்பும் விதத்தில் கதை நகர்ந்தது என்பதால், இந்த புதிய எபிசோடுகளும் பெரிய பேச்சுப்பொருளாகியுள்ளன.

கோமதி சங்கர்

கோமதி சங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்ம்ருதி வெங்கட், விஜயஸ்ரீ உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான கோமதி சங்கர் திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்த படம் ஒரு உணர்ச்சி ரீதியான சமூக-திரில்லர். மனித உறவுகள், திடீர் சம்பவங்கள், அதிரடிகள்… பல அம்சங்களை இணைத்து எடுத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குற்றம் புரிந்தவன்

இந்த வார ஓடிடி ரிலீஸ்களில் மிகவும் பேசப்படும் ஒன்று ‘குற்றம் புரிந்தவன்’ வெப் சீரிஸ். பசுபதி, லட்சுமி பிரியா, விதார்த் போன்ற திறமையான நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் இந்த குற்ற-விசாரணை த்ரில்லர் மிகவும் தீவிரமான கதைக்களம் கொண்டது.

சீரிஸை இயக்கியவர் செல்வமணி. தயாரிப்பு அவினாஷ். மொத்தம் 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த சீரிஸ், ஒரு கொலை வழக்கைச் சுற்றிய உண்மைகளை ஆராயும் விதத்தில் அமைந்துள்ளது.

The Girlfriend

National Crush ராஷ்மிகா மந்தனா நடித்த ‘The Girlfriend’ திரைப்படம் தியேட்டர்களில் வெளிவந்தபோது கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், ஓடிடி-யில் பெரும் ரீச் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது காதல், மனநிலை, மனித உணர்வுகள் மற்றும் modern relationships-ஐ கையாளும் ரொமான்டிக்-டிராமா. நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

Dies Irae

ராகுல் சதாசிவன் மலையாள industry-யில் ஹாரர் படங்களில் தனித்துவமான கையெழுத்து கொண்ட இயக்குநர். அவரின் புதிய படம் ‘Dies Irae’ தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

அமானுஷ்யங்கள், அச்சம், திருப்பங்கள் மூன்று அம்சங்களையும் சமமாக கலந்த மிக realistic horror approach-இல் படம் எடுத்திருப்பதால், தமிழ் பார்வையாளர்களுக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன்

இந்த வார ஓடிடி லிஸ்டில் முக்கியமாக பேசப்படும் மற்றொரு புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன்’. ஜஸ்வினி ஜே இயக்கியுள்ள இந்த த்ரில்லர் வலைத் தொடர் ஆஹா தளத்தில் டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. முழுக்க முழுக்க காவல்துறை சஸ்பென்ஸ், மிஸ்டிரி விசாரணைகளை மையமாகக் கொண்ட கதை இது.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.