இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டும் OTT தளங்கள்.. முதல் இடம் யாருக்கு?

இந்தியாவில் ஓடிடி தளங்கள் மிகவும் விருத்தி அடைந்து வருகிறன. சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. ஜியோ ஹாட்ஸ்டார்முதலிடத்தில் உள்ளது, அதன் பின் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், சோனி லிவ்மற்றும் ஜீ5போன்ற நிறுவனங்கள் வருமானத்தில் தொடர்ந்து இடம் பிடித்துள்ளன.
இந்தியாவில் கடந்த 5 ஓடிடி தளங்களின் வளர்ச்சி சொல்லிக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மொபைல் டேட்டாவின் மலிவு, அதிவேக இணைய வசதிகள், ஸ்மார்ட்போன் புழக்கம், புதிய வகை உள்ளடக்கங்களுக்கான ஆர்வம் இவை எல்லாம் சேர்ந்து இந்திய ஓடிடி மார்க்கெட்டை உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சந்தைகளில் ஒன்றாக மாற்றியிருக்கிறது.
இந்த கடும் போட்டியில் யார் அதிகம் வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த வருமான விவரங்கள், ஜியோ ஹாட்ஸ்டார் இந்திய ஓடிடி தளங்களின் மேல் நிலையில் இருப்பதை தெளிவுபடுத்துகின்றன.
இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் ஓடிடி தளம் என்ற பட்டத்தை தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது. வருடத்திற்கு ரூ. 10,800 கோடி வருமானம் ஈட்டுவதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய ஓடிடி சந்தையிலும் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகளாவிய ஸ்ட்ரீமிங் என்டர்டெயின்மெண்ட் துறையில் முன்னணியில் இருக்கும் நெட்பிளிக்ஸ், இந்தியாவில் வருடத்திற்கு ரூ. 2900 கோடி வருமானத்துடன் இரண்டாம் இடத்தில் திகழ்கிறது. நெட்பிளிக்ஸின் இந்திய ஸ்ட்ராட்டஜி மற்ற தளங்களைப்போல் பொதுமக்களிடம் மிக விரைவாக பரவவில்லை என்றாலும், அதன் பிரீமியம் ஸ்டைல் உள்ளடக்கங்கள் முக்கிய காரணமாக மில்லினியல்ஸ் மற்றும் நகர்ப்புற இளைஞர்களிடையே வலுவான ஆதரவைக் கொண்டுள்ளது.
அமேசான் ப்ரைம் இந்தியாவின் மிக அதிக பேன்ட்ரேஷன் கொண்ட ஓடிடி தளங்களில் ஒன்று. ஆண்டு ரூ. 1200 கோடி வருமானம் என்ற எண் இந்தியர்களின் வீடுகளிலேயே பிரதான ஸ்ட்ரீமிங் ஆப்ஸ் ஒன்றாக இது இருப்பதைச் சொல்லுகிறது. அமேசான் ப்ரைமின் சிறப்பு—ஓடிடி மட்டுமல்லாமல், Amazon Shopping-க்கும் இணைந்து கிடைக்கும் பயன்கள். இதனால், குடும்பத்திற்காக எடுத்துக் கொள்ளப்படும் சப்ஸ்கிரிப்ஷன் பிளான் அதிக அளவில் பிரபலமானது.
சோனி லிவ் இந்திய சந்தையில் ஒரு “கோன்டென்ட் ஸ்பெஷலிஸ்ட்” தளமாக மாறிவிட்டது. ஆண்டு ரூ. 1100 கோடி வருமானத்துடன் இப்போது நான்காவது இடத்தில் உள்ளது. சோனி லிவ் அதிக ஆக்ஷன், த்ரில்லர், ரியாலிட்டி, கிரிக்கெட் போன்ற துறைகளில் கவனம் செலுத்துகிறது.
ஜீ5 இந்தியாவின் மிக விரைவாக வளர்ந்து வரும் ஓடிடி தளங்களில் ஒன்று. ஆண்டு ரூ. 1050 கோடி வருமானம் என்ற எண், பாரம்பரிய தொலைக்காட்சி பார்வையாளர்களை டிஜிட்டலுக்குக் கொண்டு வருவதில் ஜீ5 முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கு ஒரு சான்று.
இந்தியாவின் ஓடிடி சந்தை இப்போது வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் மிகப்பெரிய வருமானத்துடன் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், நெட்பிளிக்ஸ் , அமேசான் ப்ரைம், சோனி லிவ், ஜீ5 ஆகியவை தத்தம்தன் உள்ளடக்க வலிமைகள் மூலம் தனித்தனி ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.
