வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மீண்டும் லவ் ட்ராக் ஆரம்பித்த ராஜா ராணி 2.. ஓவர் ஆக்ட்  செய்யும் ஆலியா மானசா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறதோ இல்லையோ ஆனால் நன்றாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு விஜய் டிவி சீரியல் கதைகள் மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது.

அதிலும் ராஜா ராணி 2 அதிகம் கலாய்க்கப்பட்டு வருகிறது. கதையே இல்லாமல் நாயகன், நாயகி இருவரையும் ரொமான்ஸ் செய்ய வைத்து சீரியலை பல நாட்களாக நகர்த்தி வருகிறார் டைரக்டர். அந்த ரொமான்ஸ் சீன் கூட பழைய தமிழ் சினிமாவில் நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன காட்சி தான்.

நேற்றைய எபிசோடில் கூட சமையல் போட்டிக்காக சென்னைக்கு வரும் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஒரு ஹோட்டலில் அமர்ந்து ஜூஸ் குடித்து கொண்டிருக்கின்றனர். அப்போது சந்தியா சரவணனுக்கு தெரியாமல் இருவரின் ஜூஸ் கிளாசையும் மாற்றிவிடுகிறார்.

சரவணன் குடித்த ஜூஸை சந்தியா ரசித்து குடிக்கிறார். இதை கண்டுபிடிக்கும் சரவணன் என்னோட ஜூஸ் கிளாசை தெரியாமல் எடுத்துட்டீங்களா என்கிறார். உடனே சந்தியா அதெல்லாம் இல்லை ஜூஸ் குடிங்க என்று சமாளிக்கிறார்.

துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விஜய், சிம்ரன் இருவரும் ஐஸ்கிரீமை மாற்றி சாப்பிடுவது போல் ஒரு காட்சி இருக்கும். அதை அப்படியே உல்டாவாக மாற்றி எடுத்திருக்கிறார் டைரக்டர். இந்த காட்சியை பார்க்கும் நமக்கு அதை ரசிப்பதற்கு பதிலாக எரிச்சலையே தருகிறது.

அதிலும் ஆலியா மானசா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். எமோஷனல் சீன் கூட நார்மலாக நடிக்கும் ஆலியா ரொமான்ஸ் சீனில் கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர் ஆக்டிங் செய்து கடுப்பேத்துகிறார்.

ஐபிஎஸ் ஆகணும் என்ற கனவுடன் இருக்கும் சந்தியா இப்போ அதை மறந்துட்டு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. என்னம்மா சந்தியா ஒரு போலீஸ் ஆபீஸர் செய்ற வேலையா இதெல்லாம் அப்போ உன்னோட ஐபிஎஸ் கனவு என்ன ஆச்சு?

Trending News