விஜய், அஜித்துக்கு இணையாக வசூலை அள்ளிய சூரி.. விடுதலை படத்தின் மொத்த கலெக்ஷன் இதுதான்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்ட படம் விடுதலை. முதல்முறையாக கதாநாயகனாக இந்த படத்தில் சூரி நடித்திருந்தார். அதுவும் கான்ஸ்டபிள் குமரேசனாக நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருந்தார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்ததால் வசூலும் கோடிகளை குவித்தது. எப்போதும் உள்ளது போல வெற்றிமாறனின் படமாக இது இல்லாமல் மிகவும் வித்தியாசம் காட்டி இருந்தார். மேலும் படத்தில் நடித்த எல்லோருமே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

Also Read : விடுதலையால் சூரிக்கு அடித்த ஜாக்பாட்.. குமரேசனின் புதிய காரின் விலை இத்தனை கோடியா!

இதுவும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் விடுதலை படத்தின் வசூல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது இதுவரை காமெடி நடிகராக மட்டுமே சூரியை கொண்டாடிய நிலையில் கதாநாயகனாக அவருடைய வசூல் ஆச்சிரியத்தை தான் அளித்துள்ளது.

அதாவது விடுதலை படம் தற்போது வரை கிட்டத்தட்ட 60 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களின் படங்கள் தான் 200, 300 கோடி வசூலை குவிக்கும். ஆனால் சூரி கதாநாயகனாக தனது முதல் படத்திலேயே 60 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பது மிகப்பெரிய விஷயம் தான்.

Also Read : கிட்டத்தட்ட 70% முடிந்த 5 இரண்டாம் பாகம் படங்கள்.. தெறிக்கவிடும் வெற்றிமாறன் குமரேசன் கூட்டணி

அதுமட்டுமின்றி விடுதலை படத்தால் இப்போது சூரிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகளில் வெற்றிமாறன் மும்மரம் காட்டி வருகிறார். மேலும் மிக விரைவில் விடுதலை 2 படம் தயாராகி விடுமாம்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். சூரி விடுதலை போன்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை அடைவார். மேலும் விடுதலை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் கூடுதலாக வசூல் செய்யும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது.

Also Read : தொடர்ந்து அந்த கெட்ட பழக்கம் இருந்தால் நான் சொல்றதை கேளுங்க.. வெற்றிமாறன் கூறும் சீக்ரெட்

Advertisement Amazon Prime Banner