சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

என்னை கைது செய்ய தில்லு இருக்கா.? மோடிக்கு சவால் விட்ட பிக் பாஸ் பிரபலம்

தமிழ் சினிமாவில் நாளை நமதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. ஆனால் இவர் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் தான் ஓரளவிற்கு பிரபலமானார்.

என்னதான் படங்களில் நடித்து வெற்றி பெற்றிருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்கள் இல்லாததால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவரது குணம் அனைவருக்கும் பிடித்துப் போக பல ரசிகர்களும் இவரை கொண்டாட தொடங்கினர்.

பிக் பாஸ் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகையாக ஓவியா இருப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அந்த புகழ் கொஞ்ச நாளிலேயே குறைந்துவிட்டது.

oviya helen
oviya helen

அதுமட்டுமில்லாமல் 90ml என்ற ஒரு அடல்ட் திரைப்படத்தில் நடித்து ஒரு குறிப்பிட்ட ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்தார் ஓவியா. தற்போது ஓவியா இந்திய பிரதமரான மோடியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் “நமது மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை ஏன் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தீர்கள்” என ஒரு குறிப்பிட்டார் மோடியை கேள்வி கேட்கும் வகையில் போஸ்டர் ஒட்டினர்.
இதற்காக போஸ்டரை ஒட்டி 17 நபர்களை அம்மாநில அரசு கைது செய்தது. இதற்கு ராகுல்காந்தி என்னையும் கைது செய்யுங்கள் என கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது ஓவியாவும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் arrestmetoo என்னும் ஹேஸ் டாக் பயன்படுத்தி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இதெல்லாம் ஒரு ஜனநாயக நாடா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் பார்க்கப்பட்டு வருகிறது.

Trending News