வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கலாச்சாரத்தை பற்றி கிளாஸ் எடுத்த ஓவியா.. லிப் லாக் அடிக்கும் போது இதெல்லாம் தெரியலையா.?

தமிழில் களவாணி உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து ஓரளவிற்கு பிரபலமாக இருந்த நடிகை ஓவியாவை ஓவர் நைட்டில் பிரபலமாக மாற்றியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட இவரை ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்து போனது.

அதற்கு காரணம் இவருடைய எதார்த்தமான நடவடிக்கையும், குழந்தைத்தனமான பேச்சும் தான். அதன்nமூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறி போன ஓவியா தற்போது என்ன செய்தாலும், பேசினாலும் அது வைரலாகி வருகிறது. அவர் பேசும் ஒரு சில விஷயங்கள் பாராட்டுகளைப் பெற்றாலும், சில சர்ச்சையான கருத்துக்கள் எதிர்வினைகளையும் பெற்று வருகிறது.

அப்படி சர்ச்சையான விஷயங்களை பேசும் ஓவியா தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்வார். அப்படி ஒரு விஷயம் தான் தற்போது நடந்துள்ளது. தமிழ் கலாச்சாரம் பற்றி பேசிய ஓவியா, ஒரு பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமானால் அதில் உள்ள நல்லது, கெட்டது அனைத்தையும் வெளிப்படையாக பேச வேண்டும் அப்போதுதான் அதற்கு தீர்வு கிடைக்கும்.

கலாச்சாரம் என்ற பெயரில் நாம் எதையும் மறைத்து வைக்க கூடாது. வெளிப்படையாகப் பேசுவதில் தப்பு ஒன்றும் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளிடம் பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.

சிறுவயதில் இருந்தே நாம் இப்படி சொல்லிக் கொடுத்து வளர்த்தால் தான் எதிர்காலத்தில் பிள்ளைகள் எந்தவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். அதனால் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குவது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது என்று மிகவும் தைரியமாக பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதைப் பற்றி தைரியமாக பேசியிருக்கும் ஓவியாவிற்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் முதலில் கலாச்சாரத்தை காப்பாற்றும் படி நடந்து கொள்ளுங்கள். அதுக்கு அப்புறம் ஊருக்கு உபதேசம் செய்யுங்கள் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

Trending News