வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஓவியா.. மீண்டும் படையெடுக்கும் பிக்பாஸ் ஆர்மி!

சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. அறிமுகமான முதல் படம் மட்டுமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு ஒரு சில படங்களில் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இருப்பினும் சரியான கதைகளை தேர்வு செய்யாததால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இவரால் இடம்பெற முடியவில்லை.

சரியான பட வாய்ப்புகள் அமையாமல் செய்வதறியாமல் தவித்து வந்த சமயத்தில் தான் ஓவியாவுக்கு ஒரு வரப்பிரசாதமாக பிக்பாஸ் நிகழ்ச்சி அமைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் இவரின் பேச்சு, செயல், நடவடிக்கை என அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக அவர் பேசிய ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’. ஸ்பிரே அடிச்சிப்புடுவேன் ஆகிய வசனங்கள் ரசிகர்களிடம் வைரலானது. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகினர். ஓவியா ஆர்மியும் உருவானது. ஒரு நடிகைக்கு ஆர்மி உருவானது முதல் முறையாக ஓவியாவிற்கு தான்.

பிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற ஓவியா டிரெண்டிங்கில் இருந்து வந்தார். ஆனால் அந்த புகழை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். சரியான கதைகளை தேர்வு செய்யாமல் தனக்கு கிடைத்த பெயரையும் புகழையும் அவரே கெடுத்துக் கொண்டார்.

இருப்பினும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரில் ஏதேனும் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். அந்த வகையில் இவர் பதிவிட்ட #GoBackModi ஹேஷ்டேக் பரபரப்பை ஏற்படுத்தியது.

oviya
oviya

இந்நிலையில், சேலை கட்டி இடுப்பை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது சினிமாவில் மார்க்கெட் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்துள்ளார்.

oviya
oviya

Trending News