செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

விஷப் பாம்பை காலில் சுற்றிக் கொண்ட ஓவியா வீடியோ.. உங்களுக்கு வேற இடமே இல்லையா

தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. இப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அதனை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்தார்.

ஓவியா நடிப்பில் கடைசியாக வெளியான களவாணி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவிற்கு வசூலைப் பெற்றது. அதனால் மீண்டும் ஓவியாவிற்கு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனால் தற்போது ராஜபீமா என்னும் படத்தினை முழுவதுமாக நம்பியுள்ளார். இப்படத்தின் வெற்றியை பொறுத்தே இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து இருப்பதால் இப்படத்தின் மீது ஓவியா அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. காலில் பாம்பு பச்ச குத்திய ஓவியா

oviya-latest-leg-tattoo-photo
oviya-latest-leg-tattoo-photo

சினிமாவை பொறுத்தவரை நடிகைக்கு வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் உடனே அவர்கள் புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார்கள். அதற்கு காரணம் புகைப்படத்தின் மூலம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனால் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு ஒரு சில இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பது தான்.

தற்போது ஓவியா அவரது காலில் பாம்பு புகைப்படத்தை பச்ச குத்தியுள்ளார். இதனை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News