புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நிறைய ரிலேஷன்ஷிப் இருந்தும் செட் ஆகல.. கூச்ச நாச்சமே இல்லாமல் போட்டுடைத்த ஓவியா

Actress Oviya: பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஓவியாவுக்கு இன்று வரை மிகப்பெரும் அடையாளமாக இருக்கிறது. மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய குணமும், துறுதுறு பேச்சும் இவரை ரசிகர்கள் மத்தியில் வெகு சீக்கிரமாகவே கொண்டு சேர்த்து விட்டது.

அதன் காரணமாகவே இவருக்கு ஒரு தனி ஆர்மியை தொடங்கி அட்ராசிட்டி செய்த சம்பவமும் நடந்தது. அதை அடுத்து ஒரு சில படங்களில் நடித்த ஓவியா இப்போது சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் சம்பவம், ராஜபீமா, பூமர் அங்கிள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Also read: இளசுகளை கெடுத்து, மனதில் நஞ்சை பதிய வைத்த 5 படங்கள்.. பேரை கெடுத்துக் கொண்ட ஓவியா

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதில் தனக்கு இருந்த ரிலேஷன்ஷிப், ஏமாற்றம், அட்ஜஸ்ட்மென்ட் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் அவர் மனம் திறந்து பேசி இருந்தார்.

அந்த வகையில் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப் இருந்ததாம். ஆனால் அதில் ஒன்று கூட எனக்கு செட் ஆகவில்லை என்று அவர் ரொம்பவும் கூலாக கூச்சமே இல்லாமல் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னை நிறைய பேர் யூஸ் செய்து கொண்டார்கள் என்றும் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

Also read: எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து காணாமல் போன 5 நடிகைகள்.. புகழ் போதையால் அழிந்த ஓவியா

அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது ஓவியாவிடம் சில பேர் நன்றாக பழகி விட்டு பிறகு பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுவார்களாம். அப்படி பண விஷயத்தில் அவர் நிறையவே ஏமாந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் இது எல்லாம் வாழ்க்கையில் நடப்பது தான் என்று அலட்டிக் கொள்ளாமல் கேஷுவலாகவும் பேசி இருக்கிறார்.

மேலும் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி அனைவரும் வெளியில் சொல்ல வேண்டும். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்ற அறிவுரையையும் அவர் கொடுத்துள்ளார். இவ்வாறாக தனக்கு இருந்த ரிலேஷன்ஷிப் பற்றி ஓவியா வெளிப்படையாக தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also read: குடிச்சிட்டு எல்லை மீறும் ஓவியா.. உன்ன எல்லாம் அதுக்கு கூப்பிடலன்னா தான் அதிசயம், பெருமை பேசும் கோண கொண்டைகாரி

Trending News