புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பி.வாசு இயக்கத்தில் மெகா ஹிட்டான 11 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய தரமான லிஸ்ட்

தமிழ் சினிமாவின் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக வெற்றி பெற்றவர்தான் வாசுதேவன், பி.வாசு என்று மரியாதையோடு அழைப்பார்கள். கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் கலக்கியவர் என்றே கூறலாம். இவர் கிட்டத்தட்ட 60 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார், இவரின் தந்தை பீதாம்பரன் நாயர் எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் போன்ற பிரபலங்களுக்கு மேக்கப் மேனாக வேலை பார்த்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய முதல் படம் பன்னீர் புஷ்பங்கள், இந்த படம் 1981-ல் வெளிவந்தது. சுரேஷ், சாந்தி கிருஷ்ணா போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள் இவர் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

என் தங்கச்சி படிச்சவ: பிரபு, ரூபினி,சித்ரா போன்ற பிரபலங்கள் நடிப்பில், கங்கை அமரன் இசையில், 1988 இல் வெளிவந்தது என் தங்கச்சி படிச்சவ. இந்த படம் 100 நாட்களை தாண்டி ஓடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அந்த வருடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம். நடிகர் பிரபுவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.

பொன்மனச் செல்வன்: விஜயகாந்த், ஷோபனா, நித்யஸ்ரீ, ஜெமினி கணேசன், கவுண்டமணி, ராதாரவி போன்ற பிரபலங்கள் நடிப்பில், 1989 இல் வெளிவந்தது பொன்மனச் செல்வன். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் படமாக வரவேற்கப்பட்டது, இந்த படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

பணக்காரன்: ரஜினிகாந்த், கௌதமி நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில், 1990-ல் வெளிவந்த படம் பணக்காரன். ஆக்சன் மற்றும் டிராமா கலந்த இந்த படம் கிட்டத்தட்ட 200 நாட்களைத் தாண்டி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. ஒரு பணக்காரன் எப்படி எல்லாம் வாழக் கூடாது, என்பதை இந்த படத்தின் கதையின் மூலம் மிக அற்புதமாக தெளிவுபடுத்தி இருப்பார்.

நடிகன்: சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி போன்ற பிரபலங்கள் நடிப்பில், இளையராஜாவின் இசையில், 1990 இல் வெளிவந்த படம் நடிகன். இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது, மலையாளம் ,ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் கவுண்டமணியின் காமெடிகள் மிகப் பெரிதாக பேசப்பட்டது, தற்போது கூட ரசிக்கும் படியாக அமைந்தது. சத்யராஜின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாகப் பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக திரையிடப்பட்டது.

சின்னதம்பி: P.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு, மனோரமா, கவுண்டமணி, ராதாரவி போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1991-ல் வெளிவந்தது சின்னதம்பி. ரொமான்டிக் கலந்த இந்த படம் 356 நாட்கள் 9 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது, 100 நாட்களையும் தாண்டி 47 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

பிரபு குஷ்புவிற்கு நிஜவாழ்க்கையில் காதல் மலர்ந்த படம் என்றே கூறலாம். இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அண்ணன் தங்கச்சி பாசம், நடிகர் பிரபுவின் வெகுளித்தனமான நடிப்பு. அதில் ஒரு தலையாக குஷ்பூ காதலிக்கிறார் அவர் கொடுக்கும் தைரியத்தில் குஷ்புவின் அண்ணன்களை எதிர்த்து நின்று எப்படி இருவரும் சேர்கிறார்கள் என்பதுதான் கதை. அப்போதே பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையில் 9 கோடிகளை தாண்டி தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றதாம்.

ரிக்சா மாமா: சத்யராஜ், கௌதமி, குஷ்பூ போன்ற பிரபலங்கள் நடிப்பில், இளையராஜாவின் இசையில் 1992ல் வெளிவந்த படம் ரிக்சா மாமா. இந்த படமும் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக திரையிடப்பட்டுள்ளது. ஒரு ரிக்ஷாக்காரன் மற்றும் ஒரு குழந்தைக்கான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதை அமைக்கப் பட்டிருக்கும். மக்கள் மத்தியில் முக்கியமாக கிராமத்து மக்களிடையே மாபெரும் வெற்றி பெற்றது.

உழைப்பாளி: ரஜினிகாந்த், ரோஜா, ராதாரவி, நிழல்கள் ரவி போன்ற பிரபலங்கள் நடிப்பில் இளையராஜா இசையில் 1993-ல் வெளிவந்த படம் உழைப்பாளி. ஆக்ஷன் டிராமா கலந்த இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது, பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது. கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வெளுத்து வாங்குகிறார் என்பதுதான் கதை. இன்றளவும் ரசிகர் மத்தியில் ரிப்பீட் மோடில் பார்க்கக்கூடிய படம் உழைப்பாளி.

மன்னன்: பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பூ போன்ற பிரபலங்கள் நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளிவந்தது மன்னன். இந்தப்படமும் பணத்திமிரில் இருக்கும் ஒரு பெண்ணின் ஆணவத்தை அடக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி வாழ்க்கையில் போராடுகிறார் என்பதை தத்துரூபமாக கண்முன் நிறுத்திருப்பார் பி.வாசு. இந்த படம் கிட்டத்தட்ட 150 நாட்களை தாண்டி வசூல் சாதனை படைத்தது.

வால்டர் வெற்றிவேல்: சத்யராஜ், சுகன்யா போன்ற பிரபலங்கள் நடிப்பில், இளையராஜாவின் இசையில் 1990-ல் வெளிவந்த படம் வால்டர் வெற்றிவேல். இந்த படம் கிட்டத்தட்ட 150 நாட்களை தாண்டி திரையிடப்பட்டுள்ளது சத்யராஜின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட படம் என்று கூறலாம். பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் பல வசூல் சாதனையை முறியடித்தது. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சேதுபதி ஐ.பி.எஸ்: பி.வாசு இயக்கத்தில், விஜயகாந்த் மற்றும் மீனா நடிப்பில் வெளிவந்தது சேதுபதி ஐ.பி.எஸ். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். ஒரு போலீஸ் அதிகாரி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மிக தத்ரூபமாக அப்போதே வெளிக்கொண்டு வந்து இருப்பார் பி.வாசு.

இந்த படத்தின் படப்பிடிப்பு 180 நாட்களில் முடிந்ததால் இது சாதனையாக கருதப்பட்டது. விஜயகாந்துக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம், இந்த படத்தின் வெற்றியை வைத்து ரகுபதி ஐ.பி.எஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2005ல் வெளிவந்த படம் சந்திரமுகி. ஒரு பங்களாவில் இருக்கும் பேயை விரட்டும் விஞ்ஞானியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருப்பார். ஜோதிகாவின் சந்திரமுகி கதாபாத்திரம் இன்றளவும் ரசிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டிருந்தது.

ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், அந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை படைத்த படமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

Trending News