வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

எனக்கே கதை எழுத சொல்லித்தரியா.. பிரபல நடிகையால் காண்டான இயக்குனர் பி.வாசு

பிரபல நடிகையிடம் கதை சொன்ன இயக்குனர் பி வாசு, கோபத்துடன் கிளம்பி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பி வாசுவின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில், நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து மாபெரும் வெற்றிபெற்றது.

இதனிடையே சந்திரமுகி 2 படத்தினை பி.வாசு இயக்க ஆயத்தமாகி வருகிறார். ஏற்கனவே இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், திரிஷா, வடிவேலு உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ள நிலையில், சந்திரமுகி கதாபாத்திரத்திற்காக நடிகை சாய்பல்லவியை, இயக்குனர் பி.வாசு அணுகியுள்ளார்.

அப்போது சாய் பல்லவியிடம் நேரில் சென்று கதையை கூறிக்கொண்டிருந்த பி.வாசு, இடையிடையே கதைகளில் மாற்றங்களை செய்யுமாறு சாய்பல்லவி கூறியுள்ளார். அதனைப் பெரிதாக பொருட்படுத்தாமல் பி.வாசுவும் தொடர்ந்து கதையை சொல்லிக் கொண்டு வந்தார்.

ஆனாலும் சாய்பல்லவி மறுபடியும் பாதியிலேயே கதையை கேட்டு விட்டு தனக்கு இந்த காட்சிகள் வேண்டாம் வேறு ஏதாவது காட்சிகள் வையுங்கள் என கூறியுள்ளார். இதனால் கடுப்பான பி.வாசு நானும் பொறுத்துக் கொண்டே போகிறேன், கதையை முழுதாக காதுக்கொடுத்து கேட்காமல் விமர்சனம் செய்து கொண்டு வருகிறீர்கள் என சாய்பல்லவியை காட்டமாக திட்டியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா கூட படத்தின் கதையை கேட்டு ஒன்றும் பேசாமல் வந்து படத்தில் நடித்து கொடுத்து பிரம்மாண்டமான வெற்றிக்கு வழிவகுத்தார் ஆனால் நீ என்னமோ எனக்கு கதை எப்படி எழுத வேண்டும் என்று சொல்கிறாய் நீ என் படத்தில் நடிக்கவே தேவையே இல்லை.

சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு நான் வேறு ஒரு நாயகியை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என பி.வாசு காட்டமாக பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது சாய்பல்லவிக்கு நல்லதொரு மார்கெட் இருப்பதாலும் சாய்பல்லவி நன்றாக நடனம் ஆடுவார் என்பதால் சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்துவார் என நினைத்து பி.வாசு சாய்பல்லவியை அணுகி கடுப்பாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News