வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்னது இவங்கதான் அடுத்த சந்திரமுகியா? இயக்குனர் வாசு மேல் கொலவெறியில் ரசிகர்கள்

சந்திரமுகி 2 திரைபடத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் நடைபெற உள்ள நிலையில், சந்திரமுகியாக நடிப்பதற்காக மார்கெட் இல்லாத நடிகை தேர்வாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்டமான வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டது. பி.வாசு இயக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருந்த சூழலில், ஊரடங்கு காலகட்டம் என்பதால் படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இப்படத்தின் கதாநாயகியாக ஆண்ட்ரியா முதலில் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவரை தொடர்ந்து திரிஷா, சாய் பல்லவி உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் இயக்குனர் பி வாசு தற்போதுள்ள முன்னணி நடிகைகளை யாரையும் தேர்வு செய்யாமல் நடிகை லட்சுமிமேனனை சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்து உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நடிகை லட்சுமி மேனன், கும்கி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

அதன் பின்னர் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில், மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக புலிக்குட்டி பாண்டி திரைப்படத்தில் விக்ரம்பிரபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தினார். இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க லட்சுமிமேனனை பி வாசு தேர்வு செய்துள்ளார் என்ற செய்தி பரவலாக வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சாய் பல்லவியை, சந்திரமுகி கதாபாத்திரத்திற்காக இயக்குனர் பி. வாசு பேசுகையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதாக அண்மையில் செய்திகள் வெளியானது இதனிடையே இயக்குனர் பி. வாசு தற்போதுள்ள நடிகைகளை பெரிதாக பொருட்படுத்தாமல் உள்ளார் என்ற செய்தியும் பரவலாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News