செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

முத்து வச்ச பொறியில் சிக்கிய PA, திருட்டு முழி முழிக்கும் கல்யாணி.. ரோகிணியை ஃபாலோ பண்ண போகும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ்க்கு யார் கடுதாசி போட்டு மிரட்டுகிறார் என்பதை கண்டுபிடிக்கும் விஷயத்தில் முத்து தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் கோவிலில் யார் சாமியார் வேஷத்தை போட்டு மனோஜிடம் பேசினார் என்பதை கோவிலுக்கு சென்று சிசிடிவி கேமரா மூலம் மனோஜ் செக் பண்ணுகிறார்.

அப்படி அந்த கேமராவில் பார்க்கும் பொழுது இந்த நபர் யார் என்று முத்து ஞாபகத்துக்கு வருகிறார். அதாவது இவர் ஏற்கனவே மனோஜ் கல்யாணம் நடக்கும் அன்னைக்கு முத்துவின் காரில் போகும்பொழுது பெண்களை தவறான வார்த்தைகள் திட்டிக் கொண்டு போனார். இதை கேட்டு பொறுத்துக் கொள்ள முடியாத முத்து அவரை காரில் இருந்து கீழே இறங்க சொல்லி தினேஷை அடித்து அனுப்பி விடுகிறார்.

ரோகினின் ரகசியத்தை கண்டுபிடிக்க கிட்ட நெருங்கிய முத்து

அடுத்ததாக லோக்கல் ரவுடி சிட்டி, தினேஷை அடிக்க வரும் பொழுது பயத்தில் பைக் ஓட்டிட்டு போகும் பொழுது ஒரு முதியவரை தினேஷ் தள்ளி விட்டுப் போனார். இதை பார்த்த முத்து, தினேஷை பிடித்து அங்கு வந்த போலீஸ் இடம் ஒப்படைத்துவிட்டு போனார். இதை ஞாபகத்தில் வைத்த முத்து வீட்டிற்கு வந்து அனைவரும் முன்னாடியும் மனோஜ்க்கு மொட்டை கடுதாசி போட்ட நபர் கோவிலில் சந்தித்த சாமியார் தான்.

இவர் ஏற்கனவே என்னிடம் இரண்டு முறை அடிவாங்கி இருக்கிறார் என்று நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே மீனா, உங்க மீது கோபம் என்றால் உங்களை தான் அவர் டார்ச்சர் பண்ணி இருக்கணும். எதுக்கு உங்க அண்ணனுக்கு மொட்டை கடுதாசி போட்டு பயத்தை கொடுக்கணும் இதில் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கிறது என்று மீனா சொல்கிறார்.

உடனே முத்து அதுதான் எனக்கும் சந்தேகமாக இருக்கிறது. அதையும் கூடிய சீக்கிரத்தில் நான் கண்டுபிடித்து விடுகிறேன் என்று முத்து சவால் விடுகிறார். இது எல்லாம் கேட்க கேட்க ரோகினின் முகம் மாறுகிறது. எங்கே மாட்டிக் கொள்வோமோ என்று திருட்டு முழி முழித்துக் கொண்டு பதட்டம் அடைகிறார். இதை பார்த்த முத்து மற்றும் மீனா சந்தேகப்படுகிறார்கள்.

அந்த வகையில் ரோகினி மீது தான் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட இவர்கள் ரோகிணியை பாலோ பண்ணும் விதமாக யாரை சந்தித்து பேசுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று முத்து ஐடியா கொடுக்கிறார். அதன்படி மீனாவுடன் சேர்ந்து சுருதியும் ரவியும் கூட்டணி சேர்ந்து ரோகிணி பற்றிய உண்மைகளை கண்டறிந்து உண்மையான பெயர் கல்யாணி என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ரோகிணியை கையும் களவுமாக பிடிக்க முத்து பொறி வைத்து விட்டார். அந்த வகையில் ரோகினி மாட்டக்கூடிய தருணம் சீக்கிரத்தில் நெருங்கப் போகிறது. ஆனால் இதற்கு இடையில் இந்த விஷயத்தில் இருந்து டைவர்ட் ஆக வேண்டும் என்பதற்காக மீனாவின் தம்பி திருடின வீடியோவை ரோகிணி எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு பிரச்சனையை முத்து மற்றும் மீனா பக்கம் திருப்ப வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அப்படி ரோகிணி பண்ணினாலும் அதிலும் ரோகினி மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தன்னுடைய ஃபோனில் இருந்து அந்த வீடியோ எப்படி போனது என்று பார்க்கும் பொழுது வீட்டில் இருக்கும் ரோகினி மீது முத்துவுக்கு சந்தேகம் வந்துவிடும். அதனால் எப்படியோ ரோகினி பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியே வர போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News