தமிழ் சினிமாவில் சர்ச்சை இயக்குனராக வலம் வரும் பா ரஞ்சித் இயக்குனர் வெங்கட் பிரபுவின் அசிஸ்டன்ட் இயக்குனர் என்பதை வெங்கட் பிரபு பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
கமர்சியல் படங்களை கொஞ்சம் கிளுகிளுப்புடன் நக்கலும் நையாண்டியும் சேர்த்து பக்கா என்டர்டைன்மென்ட் படங்களாக கொடுப்பதில் கில்லாடி வெங்கட் பிரபு. ஆனால் கடந்த சில படங்கள் அவருடைய தரத்திற்கு இல்லை.
இதன் காரணமாகவே தற்போது சிம்புவை வைத்து மாநாடு எனும் படத்தை மெனக்கெட்டு உருவாக்கி வருகிறார். கண்டிப்பாக இந்த படம் தன்னுடைய சரிவிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் என பெரிதும் நம்பி கொண்டிருக்கிறாராம்.
வெங்கட் பிரபு பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் சென்னை 600028 படம் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அந்த அளவுக்கு இளம் ரசிகர்களை கவர்ந்த திரைப்படம்.
அந்த படத்தில் அப்போது வெங்கட் பிரபுவிடம் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி வந்த பா ரஞ்சித் ஒரு கிரிக்கெட் போட்டியின் காட்சியில் நடித்திருக்கும் விஷயம் தற்போதுதான் நெட்டிசன்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பா ரஞ்சித் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பு கிடைக்குமா என பல வருடங்களாகக் காத்துக் கிடக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் தொடர்ந்து அவரை வைத்து கபாலி, காலா என்ற இரண்டு படங்கள் கொடுத்து மாஸ் இயக்குனராகவும் மாறி விட்டார்.