மகான் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இதைத் தொடர்ந்து விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.
மேலும் இந்தத் திரைப்படம் கே ஜி எஃப் திரைப்படத்தை போன்று இருக்கும் என்றும் கூறப்பட்டது. கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்த கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பல கோடி அளவில் வசூல் சாதனை புரிந்தது.
அந்த கதை கருவை மையப்படுத்தி தான் பா ரஞ்சித் சியான் 61 திரைப்படத்தை எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ரஞ்சித் இந்த படம் குறித்த சில ரகசியங்களை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த திரைப்படம் கே ஜி எஃப் திரைப்படத்தை காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட கதைக்களமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கபாலி திரைப்படத்திற்கு பிறகு நான் கே ஜி எஃப் பற்றிய கதையை தான் படமாக்க நினைத்திருந்தேன் அந்த சமயத்தில் கேஜிஎப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் அதன் டிரைலரை பார்த்தேன். அதில் சில விஷயங்கள் நான் யோசித்து வைத்தது போல் இருந்தது. இதனால் படம் வெளியாகும் வரை நான் காத்திருந்தேன்.
பிறகு படம் வெளியானவுடன் தான் தெரிந்தது என்னுடைய கதைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. ஏனென்றால் கே ஜி எஃப் திரைப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக இருந்தது. ஆனால் உண்மையில் கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த நிகழ்வுகளையும், அங்கு இருந்த மக்களின் வாழ்வைப் பற்றியும் தெளிவாக அதில் காட்டப்படவில்லை.
19ஆம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி தான் சியான் 61 இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்தப் படத்திற்காக விக்ரம் வேற லெவலில் கெட் அப் போட இருக்கிறார் என்றும் அதை நிச்சயம் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.