பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ஈஸ்வரன் பட ரிலீஸ் நாளில் வெளியான மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை மிரட்டி விட்டது.
தற்போது அதனை தொடர்ந்து கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மட்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடித்து வருகிறார். முதலில் தொப்பையும் தொந்தியுமாக சில காட்சிகளில் நடித்து இருந்தார் சிம்பு. தற்போது உடல் எடையை குறைத்து விட்டதால் மீண்டும் அந்த காட்சிகளை எடுக்க முடிவு செய்துள்ளது படக்குழு.
மேலும் முன்னதாக கன்னடத்தில் மட்டி படத்தை இயக்கிய இயக்குனரே சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருந்த நிலையில் தற்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தில் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
சிம்புவுடன் பிரபல இளம் நடிகர் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் மேலும் பிரியா பவானி ஷங்கரும் இந்த படத்தில் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மாநாடு படத்தை முடித்துவிட்டு விரைவில் பத்து தல படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ள சிம்பு படத்தில் பா ரஞ்சித் படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட கலையரசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
![pa-ranjith-about-education](https://www.cinemapettai.com/wp-content/uploads/2019/08/pa-ranjith-about-education.jpg)
சிம்பு தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் மீது மிகவும் கவனமாக இருப்பதாகவும் கதை தேர்வில் மிகவும் அக்கறை காட்டி வருவதாகவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
![](https://www.cinemapettai.com/wp-content/uploads/2019/09/kalai-banner.jpg)